More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • யூடியூப்’ பார்த்து கருக்கலைப்பு செய்ய முயன்ற இளம்பெண் கவலைக்கிடம்
யூடியூப்’ பார்த்து கருக்கலைப்பு செய்ய முயன்ற இளம்பெண் கவலைக்கிடம்
Sep 28
யூடியூப்’ பார்த்து கருக்கலைப்பு செய்ய முயன்ற இளம்பெண் கவலைக்கிடம்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே உள்ள யசோதா நகரை சேர்ந்த 25 வயது பெண், ஆண் நண்பர் ஒருவருடன் பழகி வந்தார்.



இதில் அவர் கர்ப்பம் அடைந்தார். இதுபற்றி ஆண் நண்பரிடம் தெரிவித்தார். அதற்கு அவர் கருவை கலைத்துவிடும்படி கூறினார். ஆஸ்பத்திரிக்கு சென்று கருக்கலைப்பு செய்தால் அனைவருக்கும் தெரிந்துவிடும் என்பதால் ரகசியமாக கருக்கலைப்பு செய்ய முடிவெடுத்தனர்.



இதுசம்பந்தமாக யூடியூப்பில் சில வீடியோக்கள் இருப்பதை பார்த்து ஆண் நண்பர் அதுபற்றி அந்த பெண்ணிடம் கூறினார். யூடியூப் வீடியோவை பார்த்து அதன்படி கருக்கலைப்பு செய்து கொள்ளும்படி கூறினார்.



அவர் சொன்னது போல யூடியூப் வீடியோவை பார்த்தபடியே கருக்கலைப்பு முயற்சியில் அவர் ஈடுபட்டார். இதில் அவருக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. ரத்தப்போக்கு அதிகமாகி மயங்கிய நிலைக்கு சென்றார். இதுபற்றி அறிந்த உறவினர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அவருடைய ஆண் நண்பர் யார் என்றும் விசாரித்தனர். சோயுப்கான் (வயது 31) என்பவர் தான் தனது நண்பர் என்று அந்த பெண் கூறினார்.

 



இதையடுத்து அவர் மீது போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar08

கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்தவர் ரமேஷ்

Mar29

தேனி மாவட்டம் 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் தங்கள் ந

Jun15

திருப்பதியில் கொரோனா ஊரடங்கால் இலவச தரிசனம் முற்றிலு

Jun02

சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி.

Aug12

நடிகர்கள் விஜய், தனுஷ் ஆகியோரை போல தமிழகத்தைச் சேர்ந்

Jun03