இந்திய விமானப்படையின் 89-வது தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் விமானப்படை வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ‘‘விமானப்படை வீரர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு விமானப்படை தினவிழா வாழ்த்துக்கள். இந்திய விமானப்படையால் நாடு பெருமை கொள்கிறது’’ எனத் தெரிவித்துள்ளார்.