More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை கவர்னரை சந்திக்கிறார்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை கவர்னரை சந்திக்கிறார்!
Oct 13
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை கவர்னரை சந்திக்கிறார்!

தமிழ்நாட்டில் நீட் தேர்வு கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு தேசிய அளவில் நடத்தப்படுவதால் தமிழக கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவு எட்டாக்கனியாகி விடுவதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

 



கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு இருந்து வருகிறது. 15-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இதுவரை தற்கொலை செய்துள்ளனர்.



நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு பெறும் புதிய சட்ட மசோதாவை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 13-ந்தேதி சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவினர் தந்த அறிக்கையை சுட்டிக்காட்டி நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வகையில் அதில் குறிப்பிட்டு இருந்தார்.



இந்த சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

 



இந்த நிலையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசுகிறார்.



அப்போது சட்டசபையில் நிறைவேற்றிய நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து விளக்கி கூறி ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று தர வலியுறுத்த உள்ளார்.



நீட் தேர்வு விலக்கிற்கு ஆதரவு தர வேண்டும் என்று ஏற்கனவே 12 மாநில முதல்-மந்திரிகளுக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி கோரிக்கை வைத்திருந்தார்.

 



இந்த நிலையில் இன்று அவர் கவர்னர் ரவியை சந்தித்து பேசுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar26

மத்திய அரசு 2016-ல் பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்

Aug24

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு நாளை (புதன்கிழமை) பிறந

Dec31

மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்க ஒன்றிய பாஜ அரசு முயற்

Jul09

கரீபியன் தீவு நாடான ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனல் மோயிஸ

Feb17

மத்திய பிரதேசத்தில் ஷாஹ்புராவில் வசிக்கும் ஒரு வீட்ட

Oct26

தமிழகம் முழுவதும் 

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமு

Oct17

நடிகர் சிவாஜி கணேசன் மரணத்துக்குப் பின் 270 கோடி ரூபாய்

Apr01

கேரள போக்குவரத்து துறை மந்திரி ஆன்றனி ராஜு வெளியிட்டு

Jun09

கொரோனாவின் 2-வது அலை இந்தியாவை கடுமையாக பதம் பார்த்து வ

Aug30

தமிழகத்தில் 

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணி

Aug07

நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்

May11

அரசியல் பிரமுகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்

Aug30