More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • விஜய் ஹசாரே கோப்பை - கர்நாடகாவை வீழ்த்தி தமிழக அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்!
விஜய் ஹசாரே கோப்பை - கர்நாடகாவை வீழ்த்தி தமிழக அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்!
Dec 22
விஜய் ஹசாரே கோப்பை - கர்நாடகாவை வீழ்த்தி தமிழக அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்!

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில்  தமிழகம் மற்றும் கர்நாடக அணிகள் மோதின. டாஸ் வென்ற கர்நாடக அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.



அதன்படி, முதலில் ஆடிய தமிழக அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு  354 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் ஜெகதீசன் சிறப்பாக ஆடி சதமடித்து 102 ரன்னில் ஆட்டமிழந்தார். ரவி ஸ்ரீனிவாசன் 61 ரன்னும், தினேஷ் கார்த்திக் 44 ரன்னும் எடுத்தனர்.



கடைசி கட்டத்தில் தமிழக வீரர் ஷாருக் கான் அதிரடியாக ஆடி 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் 



கர்நாடக அணி சார்பில் பிரவீன் துபே 3 விக்கெட்டும்,  பிரஷித் 2 விக்கெட்டும், வைஷக், கரியப்பா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 



இதையடுத்து, 355 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கர்நாடக அணி களமிறங்கியது. ஆனால் தமிழக அணியின் சிறப்பான பந்துவீச்சு அவர்களை கட்டுப்படுத்தியது.



கர்நாடக அணி 39 ஓவரில் 203 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகமாக எஸ்.சரத் 43 ரன்கள் எடுத்தார். நட்சத்திர ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.



தமிழக அணி சார்பில் சிலம்பரசன் 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும் கைப்பற்றினர். இதன்மூலம் 151 ரன் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.



மற்றொரு காலிறுதி போட்டியில், உத்தர பிரதேசம் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இமாசல பிரதேசம் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct25

ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர்-12 சுற்றுக்கு முன்னேற

Mar04

இந்திய டெஸ்ட் அணியில் 10 ஆண்டுகளுக்கு பின் புதிய நிகழ்வ

Sep20

இந்தியா மற்றும் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிகளுக்கிட

Oct15

மகளிருக்கான ஆசியக் கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரின் இறுதி

Sep07

கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன

Jan22

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டா

Feb12

இந்திய பெங்களுரில் இன்று நடைபெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத

Sep22

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இர

Feb02

ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக சம்பளம் வாங்கிய வீரர் என்ற

Feb07

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன

Feb07

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே முதல் 2 டெஸ்ட் போட்டி

May28

இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் விபத்தில் பலியான செய்து அற

Oct01

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல

Jan17

அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டின் போது, நண்பரின் க

Mar20

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மொயின் அலிக்கு 20 நாட்க