More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மாதகல் மீனவரை கொலை செய்தது கடற்படையினரே என சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு.
மாதகல் மீனவரை கொலை செய்தது கடற்படையினரே என சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு.
Jan 11
மாதகல் மீனவரை கொலை செய்தது கடற்படையினரே என சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு.

இலங்கை கடற்படையே மாதகல் மீனவரை கொலை செய்துள்ளது என தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்திருந்தார் .



இன்று யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் சடலமாக மீட்கப்பட்டவரின் தலையில் பலத்த காயம் காணப்படுவதுடன், அவர் பயணித்த படகின் வெளி இணைப்பு இயந்திரம் சேதமடைந்து காணப்படுகின்றது.



இதிலிருந்தே தெரிகிறது படகு வேண்டுமென்று மோதச் செய்யப்பட்டு அடாவடி படுகொலை நிகழ்துள்ளது என்று. இந்த அடாவடியை செய்தவர்கள் கடற்படையினர் என மக்கள் இங்கு அறிவித்துள்ளனர்.



மீனவர் ஒருவர் விபத்து மூலம் உயிரிழந்தால் 24 மணித்தியாலங்களின் பின்னரே சடலம் கரையொதுங்கும்  ஆனால் உயிரிழந்தவரின் உடல் சூடு கூட தணியவில்லை என உறவுகள் தெரிவித்துள்ளனர்.



இது தவிர இன்னமும் நீதவான் சடலத்தை வந்து பார்வையிடவில்லை.பதில் நீதவானை அமர்த்திவிட்டு இங்கு வர முடியாத நிலையில் நீதித்துறை உள்ளது. எங்களை நாமே ஆளும் ஆட்சி முறை வேண்டும்.



இந்த கொலையில் யாரும் சாட்சி சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் சாட்சி சொல்பவர்களும் கொலை செய்யப்படலாம் என்ற அச்சம் காணப்படுகிறது என தெரிவித்துள்ளார்.



இதேவேளை, நேற்றைய தினம் இரவு மீன்பிடிக்கச்சென்ற மாதகல் பகுதி மீனவர் ஒருவர் (எட்வேட் மரியசீலன் -வயது 31) இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb23

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில்

Oct03

வவுனியா கோவில்குளம் பகுதியில் இளைஞர் குழு ஒன்று, வீதி

Sep18

யாழ். மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மே

May01

எதிர்காலத்தில் தனியார் துறை வேலைகளில் பாரிய வீழ்ச்சி

May24

அம்பாறை - கல்முனை வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலை

Jan24

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலமைத்

Apr15

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள

Feb14

தமிழ் மக்களின் உரிமை கோரிக்கைகளை நசுக்கும் விதமாக

Jul22

கோரிக்கைகளை முன்வைத்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவர

Sep08

வவுனியாவில் நேற்று 10பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்த

Feb08

சுயாதீன மனித உரிமை தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழ

Jan10

எதிர்வரும் நாட்களில் மதுபானம் மற்றும் சிகரட்டின் வில

Jan17

இடைநிறுத்தப்பட்டிருந்த தூரப் பிரதேசங்களுக்கான ரயில்

Aug11

கொவிட் கட்டுப்படுத்தல் தொடர்பாக ரணில் தெரிவித்த கருத

Mar12

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால்  தொடர் போ