More forecasts: 30 day weather Orlando

சமையல்

  • All News
  • உங்கள் வீட்டில் பொங்கல் சாப்பிட முடியாமல் உள்ளார்களா? இதைச் செய்து பாருங்கள்!..
உங்கள் வீட்டில் பொங்கல் சாப்பிட முடியாமல் உள்ளார்களா? இதைச் செய்து பாருங்கள்!..
Jan 12
உங்கள் வீட்டில் பொங்கல் சாப்பிட முடியாமல் உள்ளார்களா? இதைச் செய்து பாருங்கள்!..

pongal பொங்கல் பண்டிகை என்றாலே அனைவரது வீடுகளிலும் கரும்பு வாங்குவது வாடிக்கையான ஒன்று. ஆனால் ஒரு சில வீடுகளில், வாங்கிய கரும்பை யாரும் உண்ணாமல் அது அப்படியே காய்ந்து கிடக்கும். இனி அது போல கரும்பை விடவேண்டிய அவசியம் இல்லை. கரும்பை வெட்டி அதில் இருந்து சாறு எடுத்து, அதன் மூலம் செய்ய கூடிய அருமையான கரும்பு சாறு பொங்கலை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.



pongal



தேவையான பொருட்கள்:

1/2 கப் பச்சரிசி, 1/4 கப் பாசிப் பருப்பு, 3 கப் கரும்பு சாறு, 3 முதல் 4 டீ ஸ்பூன் நெய், 1/2 டீ ஸ்பூன் ஏலக்காய் தூள், 8 முந்திரி, 10 காய்ந்த திராட்சை, ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம்.



செய்முறை:

முதலில் ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து அதில் 1 டீ ஸ்பூன் நெய் விடவேண்டும். பிறகு அதோடு 1/4 கப் பாசிப் பருப்பு சேர்த்து, இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் நன்றாக வறுக்க வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் நன்றாக கழுவிய 1/2 கப் பச்சரிசியை எடுத்துக்கொண்டு அதோடு, வறுத்தெடுத்த பாசிப் பருப்பை சேர்த்துக்கொள்ளவேண்டும்.



arisi paruppu



இந்த கலவையோடு 3 கப் கரும்புச் சாறை சேர்க்க வேண்டும். பின்பு இதை குக்கரில் வைத்து 5 முதல் 6 விசில் வரும் வரை விட வேண்டும்.பின்பு குக்கரை திறந்து அதில் உள்ளவை அனைத்தும் சிறிதளவு மசியும் வகையில் சற்று அழுத்தியவாறு கிளறிவிட வேண்டும்.



பின்பு இந்த கலவையோடு 1/2 டீ ஸ்பூன் ஏலக்காய் தூள் மற்றும் ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம் சேர்த்து நன்றாக கிளறி விடவேண்டும். அடுத்ததாக மீண்டும் கடாயை எடுத்து அடுப்பில் வைத்து அதில் 3 டீ ஸ்பூன் நெய் சேர்க்கவேண்டும். பிறகு அதில் 8 முந்திரியை சேர்த்து, முந்திரி இளம் பழுப்பு நிறம் ஆகும் வரை வறுக்க வேண்டும். பிறகு அதில் 10 காய்ந்த திராட்சை சேர்த்து ஓர் இரு நிமிடங்கள் வதக்க வேண்டும்.



pongal



பின்பு இந்த கலவையை, ஏற்கனவே சமைத்து வைத்துள்ள பொங்கலோடு சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும். அவ்வளவு தான் சுவையான கரும்பு ஜூஸ் பொங்கல் தயார். இதில் இனிப்பு சற்று அதிகம் வேண்டும் என்று நினைப்பவர்கள் தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar08

நாம் என்னதான் ஹோட்டலில் சென்று மொறு மொறுவென்று கொடுக்

Feb15

சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில்

May17

பல விதமான தயிர்சாதத்தை சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால்

Jan27

 மீன் வகைகளிலேயே இறால் மீன் என்றால் பலருக்கும் அதீத

Mar08

முட்டை உணவில் பல விதமான நன்மைகள் அடங்கியுள்ளது. முட்ட

Feb24

ரவை என்றாலே பயந்து ஓடுபவர்களுக்கான சூப்பரான டேஸ்டியா

Jan12

pongal

Feb06

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பதில் வைட்டமின் டி குறை

Oct13

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ - 1
கடலைப் பருப்பு - 1 ட

Oct24

கசகசா பாயசம் என்பது கசகசா மற்றும் தேங்காய் சேர்த்துச்

Oct21

ஐஸ்க்ரிம், கூல்டிரிங்ஸ் போன்று ஃபலூடாவும் கோடைகாலத்த

Feb07

வேலைக்கு சென்று வீட்டிற்கு திரும்பி வரும் பெண்கள் அவச

Mar12

ரவை என்றாலே வெறுத்து ஒதுக்குபவர்களுக்கு நடுவே, ரவையில

Mar09

இட்லி, தோசைக்கு ஏற்ற மிகவும்  அட்டகாசமான கத்திரிக்

Feb07

வாழைக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி எல்லாம்