இசையமைப்பாளர் இளையராஜா மக்களால் பெரிய அளவில் கொண்டாடப்படுபவர்.
எத்தனை காலம் மாறினாலும் எப்போதும் இவரது புகழ் மாறவே மாறாது. இப்போது இசைஞானி ரசிகர்களுக்கு கொண்டாட அளவே இல்லாத ஒரு செய்தி வந்துள்ளது.
அது என்னவென்றால் விரைவில் விண்வெளியில் இளையராஜாவின் இசை ஒலிக்க இருக்கிறதாம்.
உலகின் எடைக்குறைவான சாட்டிலைட்டில் இளையராஜாவின் பாடல் இடம்பெற இருக்கிறது. இந்த செய்தி வெளியாக ராஜா ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார்கள்.