எம்பிலிப்பிட்டிய, பணாமுர – கடுவன வீதியில் கமகந்த பிரதேசத்தில் மண் அகழும் இயந்திரம் ஒன்றினால் மோதப்பட்டு 12 வயதுள்ள சிறுவன் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
நேற்று கடுவன பிரதேசம் நோக்கி கற்களை ஏற்றிச்சென்ற பாரஊர்தியொன்றை மேடான பிரதேசத்தில் வைத்து மேற்படி மண் அகழும் இயந்திரம் தள்ளிக்கொண்டிருந்தபோது, குறித்த சிறுவன் பாரஊர்தியில் ஏற முற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்போது, மண்அகழும் இயந்திரத்தின் முன்பக்க சில்லில் சிக்குண்டு சிறுவன் பலத்த காயமடைந்துள்ளார்.
பின்னர் சிறுவனை எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்தபோது, உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் தடயம்கந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மண்அகழும் இயந்திர இயக்குநர் பணாமுர காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.