மட்டக்களப்பு வவுணதீவு காவற்துறை பிரிவிலுள்ள பாவக்கொடிச்சேனை கற்பகேணி வயல் பகுதியில் கைவிடப்பட்டிருந்த 3 கைக்குண்டுகளை நேற்று வியாழக்கிழமை (02) மீட்டுள்ளதாகவும் இதனை வெடிக்க வைத்து செயலிழப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
காவற்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய குறித்த வயல்பகுதியில் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து நேற்று மாலை இந்த கைக்குண்டுகளை மீட்கப்பட்டதுடன் இதனை வெடிக்க வைப்பதற்கான நீதிமன்ற உத்தரவை பெற்று இன்று வெள்ளிக்கிழமை வெடிக்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு காவற்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.