More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • உற்சாகத்தில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட தலிபான்கள்... 17 பேர் உயிரிழப்பு!
உற்சாகத்தில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட தலிபான்கள்... 17 பேர் உயிரிழப்பு!
Sep 04
உற்சாகத்தில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட தலிபான்கள்... 17 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானின் ஆட்சியைக் கைப்பற்றி உள்ள தலிபான்கள், இந்துகுஷ் மலைத்தொடருக்கு அருகில் அமைந்துள்ள பஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சாலே தலைமையிலான தேசிய கிளர்ச்சி படைக்கும், தலிபான்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. 



இந்நிலையில், பஞ்ச்ஷிர் மாகாணமும் தலிபான்கள் கட்டுக்குள் வந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதனை அம்ருல்லா சாலே மறுத்துள்ளார். பின்னர் தலிபான் தலைவர்களும் இந்த தகவலை மறுத்தனர்.



ஆனால், பஞ்ச்ஷிர் மாகாணம் தலிபான் வசம் வந்துவிட்டதாக தகவல் பரவத் தொடங்கியதால், தலிபான் படையினர் உற்சாகத்தில் திளைத்தனர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இவ்வாறு, காபூலில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 17 பேர் உயிரிழந்ததாகவும், 41 பேர் காயமடைந்ததாகவும் செய்தி நிறுவனங்கள் கூறி உள்ளன.



இவ்வாறு துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவதை தலிபான் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாகித் கண்டித்துள்ளார். வானத்தை நோக்கி சுடுவதை தவிர்த்து கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள் என்று அவர் டுவிட்டர் மூலம் செய்தி வெளியிட்டுள்ளார். தோட்டாக்கள் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும், எனவே தேவையில்லாமல் சுடவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov16

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் சமீப காலமாக த

Mar14

ரஸ்யா சீனாவிடம் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை கோரு

Jan01

கொரோனா தொற்று பாதிப்பு குறித்த உண்மையான தரவுகளை தவறாம

Sep16

இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளராக இருந

Jan25

எதிர்க் கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியை ஆதரிக்கும் எத

Sep29

சிங்கப்பூரில் 1970-ம் ஆண்டுக்கு பிறகு அந்த நாட்டின் மக்க

Oct11

அமெரிக்க கடற்படை தளபதி மைக் கில்டே இந்த வாரம் இந்தியா

Oct16

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் பதவிக

Mar12

உக்ரைன் தலைநகர் கீவ் மீது இன்னும் ஒரு சில தினங்களில் ர

Aug17

ஆப்கானிஸ்தான் தலிபான்களின் வசமானதிலிருந்து பல்வேறு

Jan19

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி நடந்து முடி

May20

ஆப்கானிஸ்தானில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் தொலைக்கா

Mar06

பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற செனட் சபை(மேலவை) தோ்

Aug31

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றதையடுத்து, உலக நாட

Mar29

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இதுவரை 1 லட்சத்து 55 ஆய