More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வடக்கு கடற்றொழிலாளர்கள் :போராட்டத்தில் குதிக்க தீர்மானம்!
வடக்கு கடற்றொழிலாளர்கள் :போராட்டத்தில் குதிக்க தீர்மானம்!
Sep 05
வடக்கு கடற்றொழிலாளர்கள் :போராட்டத்தில் குதிக்க தீர்மானம்!

இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோதச் தொழில் முறைகளினால் ஏற்படுகின்ற பாதிப்புக்களில் இருந்து தங்களை பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம்  உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் பொறுமையின் எல்லையில்  இருப்பதாகவும் வடக்கு கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.



மேலும், இலங்கை அரசாங்கத்தின் அசமந்தப் போக்கினைக் கண்டித்துள்ள வடக்கு கடற்றொழிலாளர்கள்,   கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீத இருந்த நம்பிக்கையினையும் இழந்துள்ளதாக தெரிவித்திருப்பதுடன், தமது கடல் வளத்தினையும் வாழ்வாதாரத்தினையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.



அண்மைக் காலமாக இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய சட்ட விரோத நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில், இன்று(05.09.2021) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சமேளனத்தின் தலைவர் அன்னராசா மற்றும் உப தலைவர்  வர்ணகுலசிங்கம் ஆகியோர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.



குறித்த ஊடகச் சந்திப்பில் அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், 



இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய செயற்பாடுகளினால் எமது தொழில் உபகரணங்கள் அழிக்கப்படுகின்றன.  அண்மைய நாட்களில் மாத்திரம் எமது கடற்றொழிலாளர்களின் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான தொழில் உபகரணங்கள்  அழிக்கப்பட்டிருக்கின்றன.



எமது கடலுக்குள் அத்துமீறி வருகின்ற இந்தியக் கடற்றொழிலாளர்களின் செயற்பாடுகள் எமது கடற்றொழிலாளர்களை அச்சுறுத்தும்  வகையில் அமைந்துள்ளன. இதனால் கடலுக்கு செல்வதற்கே நம்மவர்கள் அஞ்சுகின்றனர். இதனால் எங்களுடைய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கின்றது.



இந்தப் பிரச்சினை பல ஆண்டுகளாக தொடர்கின்ற போதிலும் யாராலும் காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.எனினும், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் எமது பிரதேசத்தினை சேர்ந்தவர், எமது பிரச்சினைகளை அறிந்தவர் என்ற அடிப்படையில் காத்திரமாக அணுகுவார் என்று நம்பினோம்.



அவரும் எமக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார். ஆனால் இதுவரை காத்திரமான மாற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை. கடற்றொழில் அமைச்சரினால் இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் கட்டுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையையும் நாம் இழந்து வருகின்றோம்.



அத்துடன், எமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது மாத்திரமன்றி எமது கடல் வளத்தினையும்  அழித்துக் கொண்டிருக்கின்றார்ள். இதனால் எமது சந்ததியே அழியும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளோம். இதனை தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.எனவே, எமது மக்களை அணி திரட்டி போராட்டங்களை நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.



அதனடிப்படையில், கட்டம் கட்டமாக மக்கள் போராட்டங்களை விஸ்தரிக்க தீர்மானித்திருக்கின்ற நாங்கள், முதற்கட்டமாக சமூக இடைவெளிகளை மதித்து, கொரோனா சங்கிலிப் போராட்டத்தினையும் நடத்த தீர்மானித்திருப்பதுடன், அடுத்த கட்டமாக யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தினை முடக்குதல் மற்றும் கடலில் இறங்கி கறுப்புக் கொடிப் போராட்டத்தினை நடத்துவது தொடர்பாகவும் தீவிரமாக சிந்தித்து வருகின்றோம்.



கொரோனா காலத்தில் போராட்டங்களில் ஈடுபடுவது பொருத்தமற்றது என்ற போதிலும் எமக்கு ஏற்படுத்தப்படுகின்ற வாழ்வாதார அச்சுறுத்ல் காரணமாக, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி போராட்டங்களை நடத்த வேணடிய நிர்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb04

மத்திய மலை நாட்டிலுள்ள விக்டோரியா உட்பட பல முக்கிய நீ

Oct04

 

நாட்டை வந்தடைந்துள்ள டீசல் மற்றும் மசகு எண்ணெய

Feb01

கொழும்பு - பம்பலப்பிட்டி பகுதியில் தொடர்மாடி குடியிரு

Mar01

இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதிக்க

Apr26

நாட்டிற்கு பல்வேறு வகையிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்த

Apr12

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசைக் கவிழ்ப்பத

Feb18

ஜெனிவா தீர்மானத்துக்கான இணை அனுசரணையிலிருந்து விலகி

Sep26

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வன்ம

Jun06

  நாட்டில் பணிஸ் ஒன்றின் விலையை 100 ரூபாவாக அதிகரிக்க

Jan27

லங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதா

Jun06

வெளிநாடுகளில் தொழில் புரிவோர் தங்கள் ஊதியத்தை டொலர்

Jan22

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியை இலங்கையில் அவ

Jun04

கோவிட் நிதியத்தில் உள்ள 1.8 பில்லியன் ரூபா நிதியை அத்தி

Feb16

இம்மாதம் கடந்த 15 நாட்களில் நாட்டிற்கு வருகை தந்த சுற்ற

Jun06

சந்தையில் தற்போது பெரி டின் மீன் ஒன்றின் விலை 600 ரூபாவா