More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • படகில் போட்டோ ஷூட்: மலையாள டி.வி நடிகை கைது!
படகில் போட்டோ ஷூட்: மலையாள டி.வி நடிகை கைது!
Sep 13
படகில் போட்டோ ஷூட்: மலையாள டி.வி நடிகை கைது!

 கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து மண்டல காலத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தங்க அங்கி கொண்டு செல்லப்படுகிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு ‘வள்ள சத்யா’ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பாரம்பரிய படகுகளில் பக்தர்கள் பம்பை ஆறு வழியாக கோயிலுக்கு செல்வார்கள். கடுமையாக விரதமிருக்கும் பக்தர்கள் மட்டுமே இப்படகில் செல்ல முடியும். இது  ‘பள்ளி ஓடம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தப் படகில் ஏறுவதற்கு பெண்களுக்கு அனுமதி கிடையாது.



இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையாள டி.வி நடிகை நிமிஷா இப்படகில் ஏறி போட்டோ ஷூட் நடத்தினார். காலில் ஷூ மற்றும் ஜீன்ஸ் பேண்ட், டிசர்ட் அணிந்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து  நிமிஷா, தனக்கு இதன் பாரம்பரிய பெருமை தெரியாது என்று கூறி மன்னிப்பு கேட்டார். இதற்கிடையே மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக கூறி, ஆரன்முளா கோயில் நிர்வாகிகள் ஆரன்முளா போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் நிமிஷா மற்றும் அவருக்கு உதவி செய்த உன்னி என்பவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். பிறகு விசாரணைக்காக நிமிஷா, உன்னி இருவரும் ஆரன்முளா போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்கள். விசாரணைக்குப் பிறகு இருவரையும் போலீசார் கைது செய்தனர். பிறகு ஜாமீனில் விடுவித்தனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar06

உலக நாயகன் கமல் ஹாசனின் இளைய மகளும், நடிகையுமானவர் அக்

Oct15

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஹிட்டாக ஓடிக் கொ

May02

விஜய்யின் பீஸ்ட் படம் தமிழில் கடைசியாக வெளியான பெரிய

Jul21

நடிகை ஹன்சிகா மட்டும் நடிக்கும் வித்தியாசமான த்ரில்ல

Jul23

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக இருப்பவர் சாண்டி மாஸ்

Nov02

சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜெய் பீம்’ திரைப்பட

Feb21

விஜய் தொலைக்காட்சி ட்ரேட் மார்க் நிகழ்ச்சியளில் ஒன்ற

May02

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகரும் இயக்குனரு

Oct06

அஜித்தின் மகளாக குழந்தை நட்சத்திரமாக என்னை அறிந்தால்

Oct28

ஓம்’ சினி வென்ச்சர்ஸ் சார்பாக சாரதி சதீஷ் தயாரிக்க, அ

Mar06

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்

Feb22

கடந்த மாதம் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்த

Jun13

தரமணி படத்தின் மூலம் பிரபலமான வசந்த் ரவி, அடுத்ததாக நட

Jan22

ராகவா லாரன்ஸ் நடிக்கும்  ருத்ரன் திரைப்படத்தின் படப

Jun29

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசன் மிகப்பெரிய வ