பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்று பிக்பாஸ் எச்சரிக்கை விடுத்தும் அதை கண்டுகொள்ளாமல் போட்டியாளர்கள் நடந்து கொண்டது பிக்பாஸை கடுப்பேற்றி உள்ளது.
அதே போல பிக் பாஸ் அல்டிமேட் ரசிகர்களுக்கு அவருடைய என்ட்ரி வேறமாறி என்டர்டெயின்மென்ட்டை கொடுத்துள்ளது.
கடந்த வாரம் ஷாரிக் கேப்டனாக இருந்த நிலையில், இந்த வாரம் சினேகன் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று திருடன் - போலீஸ் என இரு டீம்கள் பிரிக்கப்பட்டு டாஸ்க் வழங்கப்பட்டது. இதற்காக போலீஸ் டீமிற்கு போலீஸ் யூனிஃபார்ம் வழங்கப்பட்டது.
டாஸ்க் துவங்குவதற்கு முன்பே, இது போலீஸ் உடை. கவனமாக, கண்ணியமாக கையாள வேண்டும் என பிக்பாஸ் எச்சரித்தார்.