இலங்கையில் இருந்து இதுவரை நிதி உதவிகள் தொடர்பில் கோரிக்கைகள் எவையும் முன்வைக்கப்படவில்லை என்று சர்வதேச நாணய நிதியம் மீண்டும் தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் குழு, இலங்கையுடன் நான்காவது ஆலோசனைகளை நிறைவு செய்துள்ளதாக, சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் கெரி ரைஸ்( Gerry Rice தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து, சர்வதேச நாணய நிதியத்துக்கு உதவிக்கான கோரிக்கை எவையும் கிடைக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையிடம் நிதியுதவிகளுக்கான கோரிக்கை விடுக்கப்பட்டால், அது தொடர்பில் விவாதிக்க தயாராக இருப்பதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் கெரி ரைஸ் தெரிவித்துள்ளார்
.