More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • நேர்மையான தேர்தலை நடத்த வேண்டும்" - சசிகலா வேண்டுகோள்...
நேர்மையான தேர்தலை நடத்த வேண்டும்
Feb 19
நேர்மையான தேர்தலை நடத்த வேண்டும்" - சசிகலா வேண்டுகோள்...

ஆளும் கட்சி அராஜகம் செய்யாமல் நேர்மையான தேர்தலை நடத்த வேண்டும் என சசிகலா கேட்டுக்கொண்டுள்ளார்.



தமிழகத்திலுள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.  அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின், திமுக எம்எல்ஏ உதயநிதி, ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்,  மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், அமைச்சர் கே.என்.நேரு , பொன்முடி , துரைமுருகன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இன்று வாக்களித்தனர். அத்துடன் நடிகர் விஜய், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட திரை பிரபலங்களும் தங்கள் வாக்கினை செலுத்தினர்.



இந்நிலையில் தியாகராயநகர் வித்யோதயா பள்ளி வாக்குச் சாவடியில் உள்ள வாக்கு மையத்தில் வி.கே. சசிகலா இன்று தனது வாக்கினை பதிவு செய்தார்.  அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் ஜெயலலிதா இல்லாமல் முதல் முறையாக வாக்களிக்கிறேன். இது மிகவும் கஷ்டமான சூழலாக உள்ளது. ஆளும் கட்சியின் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். அராஜகம் செய்யக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். அத்துடன் காவல்துறையினரும், நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்திய சசிகலா , அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தால் மட்டும் போதாது ; நியாயமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்றார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct05

புதுடெல்லி இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ப

Feb02

தமிழக சட்டசபை வரவு செலவுத் திட்ட கூட்டத்தொடரை பெப்ரவர

Feb08

உத்தரகாண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் பனிப்பாறை உட

Jul14

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ‘கன்வர் யாத

Jun01

கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்-அமைச்சர் ம

Oct31

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 28-ந்தேதி மாலை சென்னை ஆழ்வார்ப

Mar26

திமுகவின் பெரும்புள்ளியான எ.வ. வேலுவின் வீடுகள், அறக்க

Aug15

இந்திய சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாட

Jul03

தமிழகத்தில் முதல்முறையாக கடலூர் மாவட்டம் பெண்ணாடம் ம

Apr29

கொரோனா தடுப்பூசிகளின் விலை தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட

Jun23

கொரோனா காலகட்டத்தில் உலகம் முழுவதும் நிதி நெருக்கடி ஏ

Apr26

இந்தியாவில் சில மாநிலங்களில் சமீப நாட்களாக கொரோனா தொற

Mar19