More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது!
Feb 19
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.



நேற்று பிற்பகல் இந்திய இல்லத்தில், இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, துணைத் தூதுவர் வினோத் ஜேக்கப், அரசியல்துறை முதன்மை செயலாளர் பானுபிரகாஷ் ஆகியோரை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், பேச்சாளர் எம்.எ.சுமந்திரனும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.



இந்தச் சந்திப்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர், அடுத்தமாதம் இலங்கைக்கு வருவதற்கான சாத்தியகூறுகள் பற்றி பேசப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அத்தோடு வடகிழக்கின் பொருளாதார அபிவிருத்தியில் இந்தியாவின் பங்களிப்பு பற்றி விரிவாக ஆராயப்பட்டது.



இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின்போதும்  அதற்கு பின்னரும் இலங்கையின் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமாக, தொடர்ந்துவந்த இலங்கை அரசாங்கங்கள் இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதிகளில், 13 ஆம் திருத்தத்திற்கு அப்பால்சென்று அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு முறையை உருவாக்குவதாக இருந்தது.



இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றப்பண்ணுவதில் இந்தியா தொடர்ச்சியாக எடுக்கும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்கின்ற அதேவேளையிலே, தொடர்ந்தும் இந்தியா அந்த பங்களிப்பை செய்து இலங்கையில், தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்வைத்தார்.



சுமார் ஒன்றரை மணிநேரம் நடந்த இந்தச் சந்திப்பில் வேறு  பலவிடயங்களும் தீர்க்கமாக ஆராயப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun30

எதிர்காலத்தில் புதிய அரசியல் முன்னணி ஒன்றை ஆரம்பித்த

Mar14

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அரச நிறுவனங்களை பரிச

May31

இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில்

May03

நாட்டில் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ம

Mar22

சர்வதேச நாணய நிதியத்தின் கடனின் முதல் தொகுதி கிடைத்தி

Jun14

எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலால் உருவா

Jul20

எதிரணியினரால் கொண்டுவரப்பட்டுள்ள வலுசக்தி அமைச்சர்

Mar18

முனிதாச குமாரதுங்க கல்லூரிக்கு அருகில் பேருந்தில் இர

Apr19

இலங்கை மக்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூச

Sep15

சாரதி அனுமதிப்பத்திரத்தின் காலத்தை ஒரு வருட காலத்திற

Oct08

பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் ந

Jul04

 

<

Dec12

தோட்ட நிர்வாகம் மற்றும் கம்பனிகளுக்கு எதிராகவும், தொழ

Jan25

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி கள் தவ

Apr05

எதிர்வரும் நாட்களிலம் நாடு முழுவதும் கடும் வெப்பமான க