More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • ஜெயக்குமார் வீட்டுக்கு போன் போடும் சசிகலா: செம பிளான்!
ஜெயக்குமார் வீட்டுக்கு போன் போடும் சசிகலா: செம பிளான்!
Feb 23
ஜெயக்குமார் வீட்டுக்கு போன் போடும் சசிகலா: செம பிளான்!

ஜெயக்குமார் மனைவிக்கு சசிகலா ஆறுதல் சொல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் அதிமுக தலைமையை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. 70 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களை திமுக கைப்பற்றும் என எடப்பாடி பழனிசாமிக்கு முதலிலேயே ரிப்போர்ட் போயுள்ளது. 30 சதவீத இடங்களில் கோவை, சேலம் உள்ளிட்ட முக்கியமான மாநகராட்சிகள் தங்கள் வசமாகும் என கணக்கு போட்டுள்ள்ளனர். ஆனால் மிகப் பெரிய வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றுள்ளது. ஒரு மாநகராட்சியைக் கூட யாருக்கும் மிச்சம் வைக்கவில்லை. வெளியாகியுள்ளது.அதிமுகவுக்கு விழுந்த இந்த பலத்த அடி காரணமாக சசிகலா கட்சிக்குள் நுழைவது சுலபாக இருக்கும் என அவரது ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர். இந்த சூழலில் சசிகலாவுக்கு வேறு ஒரு யோசனையும் சொல்லப்பட்டுள்ளது.



அதிமுக தரப்பில் சசிகலாவை அதிகம் விமர்சித்துப் பேசியவர்களில் முக்கியமானவர் ஜெயக்குமார். அவரது கருத்து மட்டுமல்லாமல், எடப்பாடி பழனிசாமி தரப்பு என்ன நினைக்கிறதோ அதை ஊடகங்களில் கொட்டுபவராகவும் ஜெயக்குமார் இருந்தார்.திமுக தொண்டரை தாக்கிய விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் சசிகலா ஆதரவாளர்கள் அவரிடம் ஒரு விஷயத்தை பகிர்ந்துகொண்டனர். ஜெயக்குமார் கைது சம்பவத்தால் அவரது மனைவி மிகுந்த மன வேதனையில் இருக்கிறார். இந்த நேரத்தில் அவரை தொடர்பு கொண்டு சசிகலா ஆறுதலாக பேசினால் அதிமுகவினர் மத்தியில் ஆதரவு பெறுகும் என்று கூறியுள்ளனர்.



ஜெயலலிதா இருந்தபோது அவருக்கு பக்க துணையாக இருந்த சசிகலா அதிரடி அரசியலுக்கு பேர் போனவர். ஜெயலலிதாவின் நடவடிக்கைகளுக்குப் பின்னர் சசிகலாவே பல நேரங்களில் இருந்துள்ளார். அந்த சசிகலா தற்போது அமைதியான வழியிலேயே கட்சியை கைப்பற்ற வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார். அதற்கு ஜெயக்குமார் கைதுக்கு ஆறுதல் தெரிவிப்பது சாதகமான பலன்களை ஏற்படுத்தும் என்கிறார்கள்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug26

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட கடற்க

Apr13

மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் இந்தியாவில் ‘டோ

Feb28

நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் சி

Aug30

ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்கள

Aug03

ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத், சமாஜ்வா

Jan28

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண

Jul01

டாக்டர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, முதல்-அமைச

Nov09