More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • ஜனாதிபதியின் இல்லம் அல்லது அலுவலகம் முற்றுகையிடப்படும்! கொழும்பில் சாணக்கியன் பகிரங்க எச்சரிக்கை
ஜனாதிபதியின் இல்லம் அல்லது அலுவலகம் முற்றுகையிடப்படும்! கொழும்பில் சாணக்கியன் பகிரங்க எச்சரிக்கை
Feb 23
ஜனாதிபதியின் இல்லம் அல்லது அலுவலகம் முற்றுகையிடப்படும்! கொழும்பில் சாணக்கியன் பகிரங்க எச்சரிக்கை

ஜனாதிபதி அலுவலகத்தினையோ அல்லது ஜனாதிபதியின் இல்லத்தினையோ முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.



கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.



மேலும் கூறுகையில், யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட கடற்தொழிலாளர்கள் இன்று கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடற்தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு என்றும் ஆதரவாக செயற்படும் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.



அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வினைத்திறனாக செயற்பட முடியாவிட்டால் அவர் பதவி விலக வேண்டும் என நான் பலமுறை கூறி வருகின்றேன்.



அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வினைத்திறனாக செயற்படாமையினாலேயே இன்று இலங்கை - இந்திய கடற்தொழிலாளர்களுக்கு இடையிலான போராட்டம் பூதாகரமாக மாறியுள்ளது.



தமிழக மக்கள் மத்தியில் தமிழ் மக்களுக்கு உள்ள அனுதாப உணர்வை மாற்றும் வகையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.



அவர் அரசாங்கத்தின் கைக்கூலியாக செயற்படுவதனை விட்டு விட்டு கடற்தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



அவ்வாறு தீர்வைப் பெற்றுத்தர அரசாங்கம் தவறினால் போராட்ட வடிவம் மாற்றம் பெறும். குறிப்பாக ஜனாதிபதி அலுவலகத்தையோ அல்லது ஜனாதிபதியின் இல்லத்தையோ முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்படும் என கூறியுள்ளார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun08

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது நாட்டில் சர்வகட்சி அ

Jan25

தரம் 11 வகுப்புகள் மட்டுமே முதலில் இடம்பெறும்   

Aug26

கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது அமு

Feb02

யாழ்ப்பாணத்தில் உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளாகி நலன்ப

Jan11

நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் மீண்டும் நேற்

Sep21

நிதி நெருக்கடிக்கு மத்தியில் அரச சேவையாளர்களுக்கு மா

Jun15

ஜனாதிபதி கோட்டாபயவிற்கும் சம்பந்தன் தலைமையிலான தமிழ

Jul14

முல்லைத்தீவு, புத்துவெட்டுவான் கிராமத்தில் 14 வயது சிற

Oct16

மட்டகளப்பில் நேற்று மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை அட

Mar27

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பெரிய

Jun21

நுவரெலியா மாவட்டத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் 5

Oct31

நீதி அமைச்சினால் சமாதான நீதிவான்களாக நியமிக்கப்பட்ட 1

May11

பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து உறுதிப்படுத்தல் கி

Apr04

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கடந்த சில தினங்க

Oct07

வீதியில் இறங்கி போராடிய முல்லைத்தீவு மீனவர்கள் தாக்க