More forecasts: 30 day weather Orlando

சமையல்

  • All News
  • இறால் மீனை சமைக்கும் போது இப்படியா வேக வைக்க வேண்டும்
இறால் மீனை சமைக்கும் போது இப்படியா வேக வைக்க வேண்டும்
Jan 27
இறால் மீனை சமைக்கும் போது இப்படியா வேக வைக்க வேண்டும்

 மீன் வகைகளிலேயே இறால் மீன் என்றால் பலருக்கும் அதீத பிரியம் உண்டு. வார விடுமுறை நாட்களில் இறால் தொக்கு சமைத்து சாப்பிடலாம்.



ஆனால், அந்த இறால் மீனை பக்குவமாய் செய்யாவிட்டால், அதன் சுவை மாறுவது மட்டுமின்றி ரப்பர் போல ஆகிவிடுமாம்.



தேவையான பொருட்கள்



இறால் சுத்தம் செய்து குடல் நீக்கியது - 250 கிராம், பெரிய வெங்காயம் - 100 கிராம், தக்காளி - 100 கிராம், இஞ்சி-பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சோம்பு - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கறிவேப்பிலை – சிறிதளவு, நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.செய்முறை விளக்கம்



முதலில், பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை தனித்தனியாக பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும், சோம்பு சேர்க்கவும். சோம்பு நன்றாக பொரிந்ததும் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.



இதன் பின்பு இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை நீங்கும்வரை வதக்கவும். கறிவேப்பிலை, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும். பின் தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.



தேவையான அளவு உப்பு, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து மசாலாவை நன்கு வதக்கி, அதனுடன் சுத்தம் செய்த இறாலைச் சேர்த்துக் கிளறி வேகவிடவும். மேலும், சிறிது நேரத்தில் இறால் வெந்ததும் கரம் மசாலாத்தூள் மற்றும் நறுக்கிய கொத்துமல்லித்தழை சேர்த்து நன்றாகக் கிளறிய பின் இறக்கவும்.



குறிப்பு



இறால் தொக்கு செய்யும் போது, தக்காளி வெங்காயம், மசாலா பொருட்களை சேர்த்து வதக்கி வைத்துக்கொண்டு, இறாலை 10 முதல் 12 நிமிடம் வரை மட்டுமே வேக வைக்க வேண்டும். அப்படி வேக வைத்தால், மட்டுமே இறால் மென்மையாகவும், சுவையாகவும் இருக்குமாம். இல்லையென்றால் ரப்பர் போல மாறிவிடுமாம்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar06

வடை என்றால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.

Mar22

பொதுவாக நாம் உண்ணும் உணவுகளில் முட்டை அதிக சத்துக்களை

May17

தேவையான பொருட்கள்

  1. புழுங்கல் அரிசி – ஒரு கப்
Mar12

ரவை என்றாலே வெறுத்து ஒதுக்குபவர்களுக்கு நடுவே, ரவையில

Feb07

வேலைக்கு சென்று வீட்டிற்கு திரும்பி வரும் பெண்கள் அவச

Mar09

இட்லி, தோசைக்கு ஏற்ற மிகவும்  அட்டகாசமான கத்திரிக்

Feb11

பிரஷர் குக்கர் குறுகிய காலத்தில் உணவை சமைக்க உதவுகிறத

Oct13

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ - 1
கடலைப் பருப்பு - 1 ட

May17

பல விதமான தயிர்சாதத்தை சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால்

Jan27

நாட்டில் உணவு பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலை

Feb13

சமையலில் சிறு சிறு குறிப்புகளை நாம் தெரிந்து வைத்திரு

Jan27

 மீன் வகைகளிலேயே இறால் மீன் என்றால் பலருக்கும் அதீத

Oct21

ஐஸ்க்ரிம், கூல்டிரிங்ஸ் போன்று ஃபலூடாவும் கோடைகாலத்த

Feb07

வாழைக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி எல்லாம்

Feb24

ரவை என்றாலே பயந்து ஓடுபவர்களுக்கான சூப்பரான டேஸ்டியா