இலங்கையின் பாடகி யோஹானி டி சில்வா (Yohani de Silva) பாடிய “மெனிகே மகே ஹித்தே” சிங்கள பாடலின் மெட்டில் அமைந்த பாடலை இந்திய மத்திய ஆளும் கட்சியான பாரதீய ஜனதா கட்சி (BJP) உத்தரப் பிரதேச மாநில தேர்தலில் தேர்தல் பாடலாக பயன்படுத்தி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநில தேர்தலில் இந்திய பிரதமர் மோடி (Narendra Modi) மற்றும் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் (Yogi Adityanath) ஆகியோருக்கு வாக்களிக்கும்படி கோரும் வகையில் பாடல் வரிகள் எழுதப்பட்டுள்ளன.
“மெனிக்கே மகே ஹித்தே” சிங்கள பாடலின் மெட்டில் அமைந்துள்ள இந்த பாடலுக்கு மக்கள் மத்தியில் மிகப் பெரிய ஆதரவு கிடைத்து வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேச மாநிலத்தின் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது.