More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • போலீஸ் உத்தியோகத்தரின் வங்கி அட்டையினை திருடிய நபர்.
போலீஸ் உத்தியோகத்தரின் வங்கி அட்டையினை திருடிய நபர்.
Jan 28
போலீஸ் உத்தியோகத்தரின் வங்கி அட்டையினை திருடிய நபர்.

புலனாய்வுப் பிரிவின் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் வங்கி பணம் மீளப்பெறல் இயந்திரத்தில் மறந்து வைத்து விட்டு சென்ற அட்டையை பயன்படுத்தி ஒரு லட்சத்து 16 ஆயிரம் ரூபாவுக்கும் மேல் மோசடி செய்த நபர் 13 நாட்களுக்கு பின்னர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.



நிட்டம்புவை நகரில் உள்ள அரச வங்கி ஒன்றுக்கு கடந்த 14 ஆம் திகதி சென்ற புலனாய்வுப் பிரிவின் பெண் அதிகாரி, அங்குள்ள பணம் மீளபெறல் இயந்திரத்தில் பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர், மறந்து அட்டையை இயந்திரத்திற்குள் விட்டுச் சென்றுள்ளார்.



அட்டையை மறந்து வைத்து விட்டதை உணர்ந்த அவர் மீண்டும் சிறிது நேரத்தில் வங்கிக்கு சென்று இயந்திரத்தை பரிசோதித்த போது அட்டை காணாமல் போயிருந்தது.



இது தொடர்பாக நிட்டம்புவை பொலிஸ் நிலைய குற்றப் பிரிவில் செய்த முறைப்பாட்டை அடுத்து நடத்தப்பட்ட நீண்ட விசாரணைகளின் பின்னர் ஊராபொல பிரதேசத்தில் சந்தேகத்தின் பேரில் இன்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் குறித்த பணம் மீளபெறல் அட்டையை பயன்படுத்தி நிட்டம்புவை நகரில் 74 ஆயிரம் ரூபாவுக்கு செல்போன் கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.



இந்த நபர் நகரில் உள்ள மற்றுமொரு கடைக்கு சென்று 42 ஆயிரம் ரூபாவுக்கு செல்போனை கொள்வனவு செய்து பணத்தை அட்டை மூலம் பெற்றுக்கொள்ளுமாறு கடை உரிமையாளரிடம் வழங்கியுள்ளார்.



இதனையடுத்து கொள்வனவு செய்த செல்போனை திரும்ப கொடுத்து விட்டு, 42 ஆயிரம் ரூபாய் பணத்தை உரிமையாளரிடம் பெற்றுக்கொண்டுள்ளார். அந்த பணத்தை பயன்படுத்தி ஆடைகளை கொள்வனவு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக நிட்டம்புவை பொலிஸார் கூறியுள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb27

வெலிகடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை ந

Oct08

இலங்கைக்கு முன்னைய அமர்வுகளில் வழங்கிய வாக்குறுதிகள

Feb09

சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்லவுடன் இடம்பெற்ற

Jun11

மட்டக்களப்பில் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் கடந்த 2

Feb02

இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெ

May09

அனுராதபுரம் – திருகோணமலை பிரதான வீதியின் நொச்சியாகம

May10

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர

Aug28

நாடளாவிய ரீதியில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் இன

Apr06

களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று

Mar04

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தான் விரும்பியவாறு ஜனாதிப

Aug16

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட

May25

ஒரு ட்ரில்லியன் ரூபா பணம் அச்சிடப்பட வேண்டியிருப்பதா

Jan21

நாட்டுக்கு ஒரு மாற்று அரசியல் கட்சியொன்று அவசியம் என்

May02

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து சுயாதீனமாக

Jan13

பேருவளை பிரதேசத்தில் 45 நாட்களுக்கு முன்னர் நரி கடித்த