More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கை தொடர்பில் அமெரிக்காவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை
இலங்கை தொடர்பில் அமெரிக்காவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை
Feb 02
இலங்கை தொடர்பில் அமெரிக்காவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

இலங்கையில் இடம் பெற்ற யுத்த காலத்தில் சர்வதேசத்தால் தடைசெய்யப்பட்ட வடகொரியாவிடமிருந்து கறுப்பு பணத்தைக் கொண்டு ஆயுதம் வாங்கியதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.



இவ்வாறு அவர் கூறியதை அமெரிக்கா போன்ற நாடுகள் கவனிக்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை வலியுறுத்தியுள்ளார்.



இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,



நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச, தாங்கள் வடகொரியாவில் இருந்து கறுப்பு டொலர்களைப் பயன்படுத்தி யுத்தத்திற்கு ஆயுதங்கள் பெற்றுள்ளதாகத் தெரிவித்திருந்தார். ஒரு நாட்டின் நிதி அமைச்சர் எவ்வாறு இவ்வாறானதொரு கருத்தைச் சொல்ல முடியும்?



பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ஒருநாட்டில் கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தி ஆயுதம் வாங்கி இந்த யுத்தத்தை நடாத்தியதாகச் சொல்லுகின்றார்கள். இனிவரும் காலங்களில் இன்னும் இன்னும் எத்தனை உண்மைகளை நாங்கள் அறியக் கூடியதாக இருக்குமோ தெரியவில்லை.



இந்த கருத்தைக் கொண்டு கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தியமை தொடர்பில் அவரை முதலில் விசாரணை செய்ய வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகள் இதனைக் கவனிக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr30

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள

Feb16

சிறிலங்கா இராணுவத்தை சேர்ந்த அனைவருக்கும் மற்றும் ஓய

Sep16

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி மாணவ

Feb05

பெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்

Jun17

தங்களுடைய கோரிக்கையின்படியே வடகடலில் பேரூந்துகள் இற

Jul06

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன் மற்றும் ஸ்ர

Sep29

இலங்கையில் 80 வீதமான மக்கள் தொற்றா நோய்களினால் பாதிக்க

Mar15

பொல்பித்திகம பஸ் நிலையத்தில் நின்றிருந்த யுவதி ஒருவர

Jan09

குருவிட்ட, கந்தலந்த பிரதேசத்தில் மனைவி கோடரியால் த

Sep15

பெண்கள்இசமூக சிவில் செயற்பாட்டாளர்கள்இசிவில் அமைப்ப

Jun18

இலங்கை முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டு

Sep24

மலேசியாவில் வேலை வழங்குவதாகக் கூறி விண்ணப்பங்கள் மற்

Apr27

ஜனாதிபதி பதவி விலக வேண்டும் மற்றும் பிரதமர் தலைமையிலா

Mar23

பின்னவல மற்றும் மஹா ஓயா பிரதேசத்தில் சந்தேகத்திற்கிட

Feb07

லங்கா IOC நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைய