More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • காதலித்த யுவதியை பார்க்கச் சென்ற இளைஞருக்கு நடந்த கொடூரம்
காதலித்த யுவதியை பார்க்கச் சென்ற இளைஞருக்கு நடந்த கொடூரம்
Feb 02
காதலித்த யுவதியை பார்க்கச் சென்ற இளைஞருக்கு நடந்த கொடூரம்

கலேவல-வீரகலவத்த பகுதியில் காதலித்த யுவதியை பார்க்கச் சென்ற இளைஞரொருவர் மீது யுவதியின் உறவினர்களால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக கலேவல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



கடந்த 28ம் திகதி ஹொரவ்பொத்தானை பிரதேசத்திலிருந்து இரண்டு வருடமாக பழகிய யுவதி வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்ததையடுத்து பார்வையிட சக நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது அங்கு யுவதியின் உறவினர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் தனது தலை முடியை வெட்டி தனக்கு காயம் ஏற்படுத்தியதாகவும் தெரிவித்து ஹொரவ்பொத்தானை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானவர் ஹொரவ்பொத்தானை- நிக்கவெவ சேர்ந்த கபூர் முகம்மட் சாகீர் (19வயது) எனவும் தெரியவருகின்றது.



இதேவேளை குறித்த தாக்குதல் நடத்தியவர் குறித்த பெண்ணின் தந்தை எனவும் அவருடன் பக்கத்து வீட்டார் இருவரும் சேர்ந்து தன்னை தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட இளைஞர் தெரிவித்தார்.



இது தொடர்பில் தாக்குதல் நடாத்திய குறித்த யுவதியின் தந்தையை  தொடர்புகொண்டு கேட்டபோது இரவு நேரத்தில் தனது வீட்டுக்கு வந்து கதவை தட்டியதாகவும் இதனாலேயே தாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.



குறித்த தாக்குதலினால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஹொரவ்பொத்தானை வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுர போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar11

நாட்டு மக்கள் தற்பொழுது மிக அதிகமாக ஒரு பாடலை விரும்ப

Jan13

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இலங்கை

Jun19

வடக்கு மாகாண சபை நிறைவேற்றிய சுகாதார நியதிச் சட்டத்து

Sep25

சாவகச்சேரியில் சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி மற

May01

கொவிட்-19 நோய்த்தொற்றினால், உலகில் மிகவும் சவாலுக்கு உள

Mar10

யாழ் மாநகர முதல்வர் தெரிவு கோரம் இல்லாததால் மீளவும் ஒ

May20

கொரோனா தொற்று பரவலையடுத்து நாட்டின் பல பகுதிகளில் தனி

Jun26

நாட்டில் அமுலில் இருந்த பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்

Feb08

மட்டக்களப்பு வாவிக்கரை முதலாம் வீதி வாவியில் ஆணொருவர

Oct22

தனியார் வகுப்பிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண

Oct07

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முதன் முறையாக 'திறன்காண் நி

Jan27

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்

Feb01

வவுனியா- செட்டிகுளம் நகர்பகுதியில் இடம்பெற்ற விபத்தி

Jan26

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக குற்

Mar12

அடுத்த 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் பல த