More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நினைவேட்டில் தாரகைகள் நூல் வெளியீடு!
நினைவேட்டில் தாரகைகள் நூல் வெளியீடு!
Feb 04
நினைவேட்டில் தாரகைகள் நூல் வெளியீடு!

தேசிய கல்வி நிறுவகம் ஆசிரியர்களின் வாண்மைத்துவ விருத்தியை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளும் கல்விமாணி கற்கைநெறியின் பதுளை நிலைய (2017 - 2020) தொகுதி கற்கை நெறி ஆசிரியர் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரியாவிடை நிகழ்வும், 'நினைவேட்டில் தாரகைகள்' நூல் வெளியீட்டு நிகழ்வும்  இடம்பெற்றது.



பதுளையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வு, கல்விமாணி கற்கைநெறியின் பேரவை தலைவர் எஸ். வசந்தகுமார் தலைமையில் இடம்பெற்றது.



இந்நிகழ்வில் விழாவிற்கு வருகைத்தந்த பதுளை கல்விமாணி கற்கைநெறி நிலைய இணைப்பாளர் எஸ்.ஜெயகாந்தன் (கல்வியியலாளர்) தலைமையிலான விரவுரையாளர்கள் அனைவரும் ஆசிரியர் மாணவர்களால் மங்கள திலகமிட்டு மலர்கொத்து வழங்கப்பட்டு இன்முகத்துடன் விழா நடைபெறும் மண்டபத்திற்கு வரவேற்கப்பட்டனர்.



இதனையடுத்து விழாவின் முதலாவது நிகழ்வாக இறைவணக்கமும், மங்கல விளக்கேற்றல் நிகழ்வும் இடம்பெற்றது. தொடர்ந்தும் ஏனைய நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.



நிகழ்வின் ஒரு அங்கமாக கல்விமாணி கற்கைநெறி மாணவர் இதழாசிரியர் நடராஜா மலர்வேந்தன் தலைமையிலான மலர்குழுவினர் " நினைவேட்டில் தாரகைகள் " எனும் நூலை வெளியீடு செய்து இணைப்பாளர் எஸ். ஜெயகாந்தன் அவர்களிடம் கையளித்தனர்.



மலையகத்தின் ஊவா மாகாண மண்ணுக்கு பெருமைச்சேர்த்த கல்வித்துறையில் சாதனைப்படைத்து கல்வியியலாளராகவும், கல்விப்பணிப்பாளராகவும், ஆசிரியர் ஆலோசகராகவும், அதிபராகவும், தேசிய கல்வியியற்கல்லூரி விரிவுரையாளராகவும், தேசிய கல்வி நிறுவகத்தின் கல்விமாணி கற்கைநெறியின் தேசிய மற்றும் பிராந்திய இணைப்பாளர்களாகவும் திகழ்கின்ற விரிவுரையாளர்களைப்பற்றிய குறிப்பாகவும் இவர்கள் தடைகளைக் கடந்துவந்த பாதைச்சுவடுகளின் மீள்பார்வையாக "நினைவேட்டில் தாரகைகள்" நூலின் ஆக்கங்களாக வெளிவந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.



இந்நிகழ்வையடுத்து கல்விமாணி கற்கைநெறி பதுளை நிலையத்தின் இணைப்பாளர் எஸ்.ஜெயகாந்தன் அவர்களின் உரை நிகழ்ந்தது.



இதன்போது பதுளை கல்விமாணி கற்கைநெறி நிலையத்தில் ஆசிரியர் மாணவர்களுக்கு கற்பித்து வழிகாட்டிய விரிவுரையாளர்களினது செயலாற்றலையும் ஆசிரியர் மாணவர்களையும் பாராட்டி வாழ்த்தினார்.  GalleryGalleryGalleryGallery






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep24

பொருளாதார நெருக்கடியினால் பிள்ளைகளை பராமரிக்க முடிய

Sep03

மீண்டும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளராக இன்று தனத

May03

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சொத்துக்களில் பெ

Feb19

கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க மற்றும் உறுப்ப

Apr27

வடக்கு மாகாணத்தில் புதிதாக 15பேருக்கு கொரோனா வைரஸ் தொற

Apr07

இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட

Mar13

பாதுகாப்பற்ற நிலையில் தொடுக்கப்பட்டிருந்த மின்சார வ

Jan20

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் மூவர் உயிரிழந்த

Feb21

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்று இலங்கைக்கு திரும்ப ம

Jul25

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 2

Jan16

இலங்கையின் அந்நிய செலாவணி வருமானத்தின் பிரதான வருமான

Jan27

கொரோனா வைரஸ் மருந்தினை பயன்படுத்துமாறு எவரையும் கட்ட

Sep30

நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊ

May01

அரசாங்கத்திற்கு எதிராக அலரி மாளிகைக்கு முன்பாக நடத்த

May27

அரசியல் கைதிகளுடைய விடுதலை அரசியல் தீர்வோடு  மட்டும