More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • இந்த 5 காரணங்களால் தான் ரஷ்யாவால் உக்ரைனை வெற்றி பெற முடியவில்லை
இந்த 5 காரணங்களால் தான் ரஷ்யாவால் உக்ரைனை வெற்றி பெற முடியவில்லை
Mar 09
இந்த 5 காரணங்களால் தான் ரஷ்யாவால் உக்ரைனை வெற்றி பெற முடியவில்லை

கடந்த பிப்ரவரி 24 ஆம் திகதி ரஷ்யா தனது படையெடுப்பை தொடங்கினாலும் படைபலத்தில் அதைவிட பன்மடங்கு சிறிய நாடான உக்ரைன் விடாமல் இதுவரை தாக்குபிடித்து வருவதை மேற்கத்திய நாடுகள் ஆச்சிரியத்துடன் உற்று நோக்கி வருகின்றன.



நோட்டோ படைகளின் உதவி இன்றியே இன்றுடன், 13வது நாளாக, உக்ரைனால் எப்படி ரஷ்ய படைகளை சமாளிக்க முடிகிறது,என்ற கேள்விக்கு 5 காரணங்களை விடையாக சர்வதேச செய்தி வெளியிட்டுள்ளது.




  • கிரிமியாவை தனி நாடாக ரஷ்யா அறிவித்த பின்னர் 2014 ஆம் ஆண்டிலிருந்தே உக்ரைன் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் படைகளை பலப்படுத்தி வந்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு உக்ரைன் சிறப்பு படைகளுக்கு நேட்டோ படை மற்றும் உக்ரைன் படைகள் அளித்த சிறப்பு போர் பயிற்சி தற்போது பலனளித்து வருகிறது. "உக்ரைனியர்கள் ரஷியாவின் படையெடுப்பை முன்கூட்டியே கணித்து 8 ஆண்டுகளாக ராணுவ கட்டமைப்பை பலப்படுத்தி, சரியான திட்டமிடலுடன் போர் பயிற்சியை மேற்கொண்டனர்." என்கிறார் ஜார்ட்டவுன் பல்கலைக்கழக இணை பேராசிரியர் டாக்லஸ் லண்டன். நேட்டோவும், அமெரிக்கப் படைகளும் உதவிக்கு வராது என்பதை முன்கூட்டியே கணித்து ரஷ்ய படைகளுக்கு அதிக சேதம் விளைவித்துள்ளார்கள் உக்ரைன் படையினர்.

  • புவிசார் அறிவு சோவியத்துடன் இணைந்து இருந்த நாடு என்பதால் உக்ரைன் குறித்து ரஷ்யா குறைத்து மதிப்பிட்டுள்ளது. உக்ரைனின் நிலப்பரப்பு சகதியாக மாறியதையும், உக்ரைனிய பொதுமக்கள் ஆயுதம் தாங்கியதையும் ரஷ்யா துளியும் எதிர்பார்க்கவில்லை. இதனை பயன்படுத்திக் கொண்ட உக்ரைன் படையினர் தக்க பதிலடியை கொடுத்தனர். "தலைநகர் கீவை எளிதில் பிடித்துவிடலாம் என்று நினைத்த ரஷ்ய படைகள் இப்போது, ஒரு கட்டிடத்திலிருந்து மறு கட்டிடத்தை தாண்டவே தடுமாறுகிறார்கள். இது போர்சூழலையே மாற்றி இருக்கிறது" என பிரான்ஸ் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • போர் சூழலில் தப்பிச்செல்லாமல் தலைநகர் கீவில் தங்கி இருக்கும் உக்ரைன் அதிபர் வொலொடிமிர் செலென்ஸ்கி தலைமையில் மக்கள் அணிதிரண்டுள்ளனர். சாதாரணமானவர்கள் கூட முன்வரிசையில் நின்று போர் புரிகின்றனர். "இலகு ரக ஆயுதங்களை பயன்படுத்த பொதுமக்களுக்கு பயிற்சியளிப்பதை தவிர்த்து உக்ரைனுக்கு வேறு வழியில்லை" எனக்கூறுகிறார் ஓய்வுபெற்ற பிரான்ஸ் ராணுவ அதிகாரி மைக்கேல் கோயா.

  • ரஷியாவின் தவறான திட்டமிடல் பிப்ரவரி 24 ஆம் தேதி மிகக்குறைவான தரைப்படைகளை உக்ரைனுக்குள் அனுப்பியதும், விமானப்படையும் தரைப்படையும் ஒருங்கிணைந்து செயல்படாததும் உக்ரைனுக்கு சாதகமாக அமைந்துள்ளது. "வெகு சீக்கிரமாகவே தலைநகர் கீவ்வை கைப்பற்றி விடலாம் என்று நினைத்த ரஷ்ய படைகளுக்கு மூக்கு உடைபட்டு விட்டது." எனத் தெரிவித்துள்ளார் அமெரிக்காவின் கடற்படை பகுப்பாய்வு மையத்தில் உள்ள ரஷ்ய ஆய்வுத்துறை இயக்குநர் மைக்கேல் கோப்மேன்.

  • முந்தைய தவறுகளை சரிசெய்து ரஷியா தற்போது படைகளை ஒருங்கிணைக்க முயற்சித்து வருகிறது.

  • உளவியல் சிக்கல் தாக்குதலுக்கு முன்பாக சில வாரங்கள் உக்ரைன் எல்லையில் படைகளை நிறுத்தி ரஷ்யா உலக நாடுகளை அச்சுறுத்தியபோது, ஸ்லாவ் உள்ளிட்ட ரஷ்ய மொழிபேசும் இனத்தவர்கள் போருக்கு தங்களையும் அனுப்பி விடுவார்கள் என அஞ்சினர். உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷ்ய படை வீரர்களுக்கு தயக்கம் இருந்ததாகவும், போரின் தொடக்கத்தில் ரஷ்ய படைகளில் ஏற்பட்ட பெரும் உயிர் சேதம் உளவியல் ரீதியாக தாக்கத்தை அவர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. ப்ரூக்கிங்ஸ் நிறுவனத்தை சேர்ந்த டாம் பெபின்ஸ்கி இதுபற்றி கூறுகையில், "ரஷ்ய அரசு போர் கைதிகளை இதற்கு முன்பதாக சித்திரவதை செய்ததும் ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு மனதளவில் அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கும்." என்றார். இதுபோன்ற காரணங்களால்தான், ரஷ்யா இன்னும் தடுமாறி வருகிறதாக கூறுகிறார்கள்.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr30

அரசமைப்புச் சட்டத்தின் 161 ஆவது உறுப்பினைப் பொறுத்தவரை

Sep20

உக்ரைனில் தொடங்கிய போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய ஜனா

Feb06

கைகளுக்கும் முகத்திற்கும் இரட்டை மாற்று அறுவைச் சிகி

Feb04

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயி

Jun08

அமீரகத்தில் சுத்தம் செய்யப்படாத ஏ.சி. எந்திரங்களால் ப

Mar10

உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) அதிரடி

Apr09

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர்

Oct10

அமெரிக்காவின் இண்டியானாபொலிஸ் நகரில் இருந்து நியூயா

May23

ஜப்பானில் பிரதமர் மோடியிடம் இந்தி மொழியில் பேசிய சிறு

Sep16

இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளராக இருந

Feb26

இந்தோனேசியாவில் மத்திய சுலவேசி மாகாணத்தில் நேற்று மு

Jun17

அமெரிக்காவில் கனெக்டிகட் மாகாணத்தில், ககெனக்டிகட் மா

Jun22

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல்

Mar14

போலந்து எல்லைக்கு அருகில், உக்ரைன் இராணுவ தளத்தின் மீ

Feb27

"ரஷ்யாவுடன் போர் செய்ய வருவோருக்கு அணு ஆயுதங்கள் மூல