More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ‘உனக்கு 77... எனக்கு 24...’ - மூதாட்டியுடன் ஜாலியாக வாழ்க்கை நடத்தும் இளைஞன்
‘உனக்கு 77... எனக்கு 24...’ - மூதாட்டியுடன் ஜாலியாக வாழ்க்கை நடத்தும் இளைஞன்
Mar 09
‘உனக்கு 77... எனக்கு 24...’ - மூதாட்டியுடன் ஜாலியாக வாழ்க்கை நடத்தும் இளைஞன்

அமெரிக்காவில் அல்மெடா என்பவர் டொனால்டாவை திருமணம் செய்தார். 2013ம் ஆண்டு கணவர் இறந்து விட, மூத்த மகனுடன் வாழ்ந்து வந்தார். ஆனால், மகனும் 2015ம் ஆண்டு இறந்து விட்டார். மகனின் இறுதிச் சடங்குக்கு டென்னசி மாகாணத்தை சேர்ந்த கேரி வந்தார்.



அப்போது, அல்மெடா அழுதுக்கொண்டிருந்தபோது, அவர் மீது கேரிக்கு காதல் மலர்ந்தது. அப்போது கேரிக்கு வயது 17.. அல்மெடாவிற்கு வயது 71.



யாரும் இல்லாமல் தனிமையில் வாழ்ந்து வந்த அல்மெடாவை அடிக்கடி சந்தித்து கேரி ரொம்ப கேரிங்கா பார்த்து வந்துள்ளார்.இதனிடையே இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது.



இவர்களின் காதலை அக்கம், பக்கத்தினர் ரொம்ப கேவலமாக பேசினர். அதையெல்லாம் இவர்கள் இருவரும் கண்டுக்கொள்ளவிலைலை. இவர்கள் இருவரும் 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.



தற்போது கேரிக்கு வயது 24. அல்மெடாவிற்கு 77 வயதாகிறது. ஆனால், இவர்கள் இருவரும் இல்லற வாழ்க்கையை மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.



இதனையடுத்து, கடந்த (பிப்ரவரி 14) காதலர் தினத்தை முன்னிட்டு இந்த உலகிலேயே சிறந்த மனைவி என்று அல்மெடாவை புகழ்ந்து கேரி இன்ஸ்டா பதிவு போட்டியிருந்தார். மேலும், வாழ்க்கையை ரசிக்க, எங்கள் இருவருக்குமான கெமிஸ்ட்ரி மிகவும் சிறப்பாக இருக்கிறது என்று கேரி பதிவிட்டிருந்தார்.



இவரின் வெளியிட்ட புகைப்படமும், இன்ஸ்டா பதிவும் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.



2ம் கொரோனாயின் போது கூட இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அப்போது, அல்மெடாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து அதிலிருந்து மீண்டார்.



வயது என்பது வெறும் நம்பர்தான் என்று கடினமான சூழலிலும் இருவரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun24

விண்வெளி திட்டங்களில் ஆர்வம் காட்டி வருகிற சீனா, தற்ப

Aug17

ஆப்கானிஸ்தான் தலிபான்களின் வசமானதிலிருந்து பல்வேறு

Apr01

வடகொரியா சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அ

Sep03

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்ப

Apr13

ஈரானின் இஸ்பகான் மாகாணத்திலுள்ள நாதன்ஸ் நகரில் புதித

Jun17