இந்தியாவில் 2020-ம் ஆண்டில் கொரோனா தொற்று பாதிப்பு தொடங்கியபோது மத்திய அரசால் தடை விதிக்கப்பட்ட சர்வதேச விமான சேவை இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் தொடங்குகிறது.
இந்தியாவில் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை தொடர்ந்ததால், கடந்த 2020-ம் முதல் சர்வதேச விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று மூலம் கொரோனா 3-ம் அலையும் பரவியதால் இந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் விமான சேவையை மத்திய அரசு மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது.
அதன்படி வருகிற மார்ச் 27-ம் தேதி முதல் சர்வதேச விமான சேவை தொடங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.