இலங்கைக்கு தொடர்ந்தும் கடன் வழங்குவதை தவிர்ப்பது குறித்து சீனா தீவிரமாக ஆராய்ந்து வருவதாக பிரபல ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பிலுள்ள சீன தூதரக அதிகாரிகள், இலங்கை அரசாங்கத்தின் சில உயர்மட்ட அதிகாரிகளிடம் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளதாக தெரிய வருகின்றது.
பிரதான இரண்டு காரணங்களை முன்னிலைப்படுத்தியே, சீன அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.
மத்திய அதிவேக வீதியின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகள் தொடர்பில் எழுந்த பிரச்சினை மற்றும் சீன உரக் கப்பல் மீள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டமை ஆகிய பிரதான காரணங்களை அடிப்படையாகக் கொண்டே சீனா இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனா இலங்கைக்கு இதுவரை 16 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிகளை வழங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.