மேற்கத்திய நாடுகளை குறிவைத்து தாக்குதல் முன்னெடுக்க போதுமான அணுஆயுத ஏவுகணை தொடர்பில் காணொளி ஒன்றை ரஷ்யா வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில் ஏதேனும் ஒரு நாடு தலையிட்டால், விளாடிமிர் புடின் அணுஆயுதத்தை பயன்படுத்த தயங்கமாட்டார் என்ற அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் திகிலூட்டும் இந்த காணொளி காட்சிகள் பகிரப்பட்டுள்ளன.
Zircon என பெயரிடப்பட்டுள்ள குறித்த ஏவுகணையானது Admiral Gorshkov என்ற போர்க்கப்பலில் இருந்து ஏவப்படும் காட்சிகள் குறித்த காணொளியில் பதிவாகியுள்ளது.
https://twitter.com/i/status/1503483608270614535
பிப்ரவரி 24ம் திகதி, உக்ரைன் மீதான படையெடுப்புக்கு முன்னர் விளாடிமிர் புடின் விடுத்த எச்சரிக்கையில், வரலாற்றில் நீங்கள் சந்தித்திராத விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றார். மேலும், போலந்து எல்லையில் அமைந்துள்ள உக்ரைன் இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்து, நேட்டோ நாடுகளை சீண்டினார்.
தற்போது உக்ரைன் போர் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் Zircon ஏவுகணை தொடர்பில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த ஏவுகணையின் வேகம் அதிகம் என்பதால் எதிரி நாடுகளின் ஏவுகணை தடுப்பு வட்டத்தில் சிக்குவதில்லை எனவும் கூறப்படுகிறது.
மட்டுமின்றி, குறித்த ஏவுகணை தாக்கிய பின்னரே அதன் இலக்கு தொடர்பில் தெரியவரும் எனவும் தெரிய வந்துள்ளது. டிசம்பர் மாதம் பதிவு செய்யப்பட்ட குறித்த காணொளியானது, மேற்கத்திய நாடுகளை அச்சுறுத்தும் வகையில் ரஷ்ய நிர்வாகத்தால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், மணிக்கு 7,000 மைல்கள் செல்லக்கூடிய இந்த ஏவுகணையானது லண்டனை 5 நிமிடத்தில் தாக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

