More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • முல்லைத்தீவில் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பிய மாணவன் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!
முல்லைத்தீவில் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பிய மாணவன் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!
Mar 20
முல்லைத்தீவில் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பிய மாணவன் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!

முல்லைத்தீவு மாவட்டம் - புதுக்குடியிருப்பு பகுதியில் வாகனத்தில் கடத்தப்பட்ட மாணவன், அடிகாயங்களுடன் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பியோடி வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



மேலும், பொலிஸ் விசாரணைகளில் தான் கடத்தப்பட்ட வாகனத்தில் மேலும் இரு சிறுவர்கள் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருப்பதாகவும் தப்பி வந்த மாணவன் பரபரப்பு வாக்கு மூலம் ஒன்றை அளித்துள்ளார்.



இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,



புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவர் நேற்றையதினம் சனிக்கிழமை (19-03-2022) மாலை தனியார் வகுப்பொன்றுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய வேளை, ஆள் நடமாற்றம் அற்ற பகுதியில் வைத்து வான் ஒன்றில் வந்தவர்களால் கடத்தி செல்லப்பட்டான்.



மாணவனை கடத்தி சென்ற வான் காட்டு பகுதி ஊடாக சென்ற போது, வானில் இருந்து பாய்ந்த மாணவன், காயங்களுடன் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பியோடி வந்துள்ளார்.



பின்னர் காயங்களுடன் தப்பியோடி வந்த மாணவனை உறவினர்கள் மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்தனர்.



சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸாரிடம், தான் கடத்தி செல்லப்பட்ட வாகனத்தில் ஏற்கனவே தன் வயதை ஒத்த இரு சிறுவர்கள் கைகள், கால்கள் கட்டப்பட்டு, வாயிற்கு பிளாஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில் வாகனத்தில் காணப்பட்டதாக பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்.



சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan20

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்

Mar08

நாட்டில் இன்றைய தினமும்(8.03) சில வலயங்களுக்கு ஏழரை மணிநே

Feb07

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தனது எரிபொருளின் விலையை நள்ளிரவு

Jan25

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் உயர் நீதிமன்ற வளாகம்

Jul25

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக

Sep30

சமூக பாதுகாப்பு சபை வட மாகாணத்திற்கான விருது வழங்கும்

Dec27

75 ஆண்டுகளாக தீர்த்து வைக்க முடியாத இன பிரச்சினையை எதிர

Mar27

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிர

Apr01

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட

Mar13

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தமிழர் தரப

Jan25

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப் பட்ட 1,

Apr13

பிலவ வருட தமிழ் புத்தாண்டை கொண்டாடும் சகல மக்களுக்கும

Sep22

முல்லைத்தீவு மாவட்ட விவசாயக் குழுக்  கூட்டம் இன்று க

Apr19

அரசின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான கூ

Apr05

புராதன பௌத்த தொல்பொருள் சின்னங்களை சிதைத்து, சட்டத்தி