More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வரிசையில் காத்திருந்து உயிரிழந்த கணவனின் இழப்பை ஏற்க மறுக்கும் மனைவி!இலங்கையில் தொடரும் அவலம்
வரிசையில் காத்திருந்து உயிரிழந்த கணவனின் இழப்பை ஏற்க மறுக்கும் மனைவி!இலங்கையில் தொடரும் அவலம்
Mar 21
வரிசையில் காத்திருந்து உயிரிழந்த கணவனின் இழப்பை ஏற்க மறுக்கும் மனைவி!இலங்கையில் தொடரும் அவலம்

இலங்கையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்திருந்தார்.



மாபொல பிரதேசத்தை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியான 70 வயதுடைய நபரே கடவத்தையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த போது  இவ்வாறு உயிரிழந்திருந்தார்.



இதன்போது உயிரிழந்தவரின் மனைவியை பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்த நிலையில், அவர் தனது கணவர் உயிரிழந்துள்ளமையை நம்பாது சர்க்கரை நோய்க்கு மருந்து சாப்பிட்டு வந்த தன் கணவர் தற்போது கோமா நிலையில் இருப்பதாகவும்,"அவருக்கு சர்க்கரை நோய், நெஞ்சுவலி. மருந்து சாப்பிடுகிறார்.ஒன்றுமில்லை என்றும் அங்கிருந்த அனைவரிடமும் கூறியுள்ளார்.



பின்னர் பொலிஸாரின் உதவியுடன் உயிரிழந்த கணவரை முச்சக்கரவண்டியில் ஏற்றி ராகம வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.



உயிரிழந்த கணவனை முச்சக்கர வண்டியில் ஏற்றி அவ்வப்போது உடலை அசைத்து சுயநினைவு பெற முயலும் காட்சி கமராக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன்,காண்போரின் கண்களையும் கலங்க வைத்துள்ளது.



இதேவேளை, நேற்று முன்தினமும் (19) கண்டி, யட்டிநுவர வீதியில் மண்ணெண்ணெய் வரிசையில் நின்றிருந்த 71 வயதுடைய நபரொருவர் தவறி விழுந்து உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May21

தமிழ்நாட்டின் திருச்சியில் சிறையில் இருக்கம் தாயகப்

May03

அலரி மாளிகைக்கு எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம

Apr02

எம்மை நெருக்கடிக்குள் தள்ள சூழ்ச்சிகளை சர்வதேசம் முன

Oct04

முன்னாள் ஜனாதிபதியின் மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாம

Mar30

யால வன சரணாலயத்தில் அரியவகை கருஞ்சிறுத்தை ஒன்றை சுற்ற

Oct21

கோழி இறைச்சியின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட

Jul26

வவுனியா பழையபேருந்து நிலையப்பகுதியில் பணியாறும் விய

Jun08

ஜனாதிபதியின் அனுமதியின்றி நந்தலால் வீரசிங்கவை மத்தி

Mar22

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள், எரிவாயு மற்றும் மின்ச

May20

பொதுச் செலவினங்களை எளிதாக்கும் நோக்கில், அரசாங்கத்தி

Oct19

மஹாபொல உதவித்தொகையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக

Mar03

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (மார்ச் 04) மதியம் 02:00 மணி

Mar30

கிளிநொச்சி வட்டக்கட்சி மாயனூர் காட்டுப் பகுதியில் பு

Oct16

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவார

Mar08

 பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்த சட்