More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்கும் இந்தியா! - பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா திட்டம்
ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்கும் இந்தியா! - பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா திட்டம்
Mar 04
ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்கும் இந்தியா! - பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா திட்டம்

ரஷ்யாவிடமிருந்து, 'எஸ் - 400' ஏவுகணை சாதனங்களை வாங்கும் இந்தியா மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முடிவெடுப்பார்' என அந்நாட்டு வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.



கடந்த 2018 அக்டோபரில் ரஷ்யாவிடமிருந்து 37ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான ஐந்து எஸ் - 400 ஏவுகணை சாதனங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது. இதே சாதனங்களை ரஷ்யாவிடம் வாங்கியதால், துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.



ஆனால், இந்தியா மீது தடை விதிப்பது குறித்து அமெரிக்கா முடிவு எடுக்காமல் மவுனம் சாதித்தது. இந்நிலையில், உக்ரைன் விவகாரத்தில் ஐ.நா., பாதுகாப்பு பேரவை மற்றும் பொதுச் சபையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டு வந்த மூன்று தீர்மானங்களிலும், இந்தியா பங்கேற்காமல் நடுநிலை வகித்துள்ளது.



எனவே, துருக்கியை போல, ரஷ்யாவிடமிருந்து எஸ் - 400 ஏவுகணை சாதனங்கள் வாங்கும் இந்தியா மீதும் அமெரிக்கா பொருளாதார தடை விதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.



இது குறித்து அமெரிக்க வெளியுறவு துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணை அமைச்சர் டொனால்டு லுா கூறியதாவது,



அமெரிக்க அரசு, சர்வதேச பாதுகாப்புக்கு எதிரான ஆயுதங்கள் வாங்கும் நாடுகள் மீது, பார்லி., ஒப்புதலுடன் பொருளாதார தடை விதிப்பது வழக்கம்.



ஆனால், துருக்கியைப் போல, ரஷ்யாவிடம்எஸ் - 400 ஏவுகணை சாதனங்கள் வாங்கும் இந்தியா மீதும் பொருளாதார தடை விதிக்கப்படுமா அல்லது விலக்கு அளிக்கப்படுமா என்ற யூக செய்திகளுக்கு பதில் அளிக்க முடியாது. தடை விதிப்பதும், விலக்கு அளிப்பதும் ஜனாதிபதி ஜோ பைடன் கைகளில் உள்ளது.



இந்தியா, அமெரிக்காவின் மிக முக்கிய நட்பு நாடு.இந்த நல்லுறவு மேலும் வலுப்பெற, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா சற்று தள்ளி நிற்பது நல்லது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar24

மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 28,699 பேருக்கு கொரோனா வைர

Mar07

அனுமன் சிலைக்கு முன்பு அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் கலந்

Mar27

சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக

Sep17

உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் பிரச்சனை

Mar03

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ண

Jul17

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.9 ஆயிரம் கோடி ச

Jun23

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நுகர்வோர் பாதுகாப்பு (இ-காமர்ஸ்)

Aug31

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து ஆசி

Dec31

மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்க ஒன்றிய பாஜ அரசு முயற்

Jul15

மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் 

நாட்டையும் அதன் ஒருமைப்பாட்டையும் மதிப்பதாக ஒவ்வொரு

Jun22

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் டுவிட

Mar13

உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த தமிழகத்தின் கோயம்புத்தூ

Apr26

ஒரு துணைவேந்தரை நியமிக்க வேண்டுமானால் உயர்கல்வித்து

Jul04