More forecasts: 30 day weather Orlando

செய்திகள்

  • All News
  • உக்ரைன் கைகளுக்கு சென்ற அமெரிகாவின் ஏவுகணைகள்! - ரஷ்யாவிற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு
உக்ரைன் கைகளுக்கு சென்ற அமெரிகாவின் ஏவுகணைகள்! - ரஷ்யாவிற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு
Mar 05
உக்ரைன் கைகளுக்கு சென்ற அமெரிகாவின் ஏவுகணைகள்! - ரஷ்யாவிற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு

அமெரிக்கா வழங்கிய பீரங்கி எதிர்ப்பு ஆயுதமான ஜாவ்லின், ரஷ்யாவிற்கு எதிராக யுத்தத்தில் உக்ரைனுக்கு மிகவும் கைகொடுக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஷ்ய தரப்பினருக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் ஒன்பதாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் ஆகிய நகரங்களில் உக்கிரமான தாக்குதல்களை ரஷ்ய படைகள் நடத்தி வருகின்றன.



எனினும், உக்ரைன் படைகளின் ஆக்ரோஷமான பதில் தாக்குதல் மற்றும் பீரங்கி எதிர்ப்பு தாக்குதலால் ரஷ்ய படைகள் முன்னேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



குறிப்பாக உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய பீரங்கி எதிர்ப்பு ஆயுதமான ஜாவ்லின், இந்த போரின் போது உக்ரைனுக்கு கைகொடுக்கிறது. சாதாரணமாக எடுத்துச் செல்லும் வகையில் இந்த ஜாவ்லின் வடிவமைக்கப்பட்டுள்ளது.



இதன் மூலம் ஏவுகணைகளை மிகவும் துல்லியமாக செலுத்தி எதிரிகளின் பீரங்கிகளை தகர்த்து அழிக்க முடியும். கடந்த சில தினங்களாக ரஷ்யாவின் பீரங்கி வாகனங்கள் இந்த ஜாவ்லின் ஏவுகணை தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றன.



இதனால் ரஷ்ய பீரங்கிகள் உக்ரைனுக்குள் எளிதாக செல்ல முடியவில்லை. இந்த ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யாவை உக்ரைன் படைகள் திணறடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



ஜாவ்லின் மூலம் 300 ஏவுகணைகள் செலுத்தியதில், 280 ரஷ்ய பீரங்கிகள் அழிக்கப்பட்டதாக, அமெரிக்க சிறப்பு நடவடிக்கை அதிகாரி கூறியதை மேற்கோள் காட்டி பத்திரிகையாளர் ஜாக் மர்பி, தனது கட்டுரையில் இதனை தெரிவித்துள்ளார்.



இது 93 சதவீத அழிப்பு விகிதம் ஆகும். தேவைப்பட்டால், ஜாவ்லினை நேரான விமானப் பாதை முறையிலும் சுட்டு, விமானத்தை வீழ்த்த முடியும். உக்ரைனில் இப்போது ஜாவ்லின் இருப்பதை ரஷியர்கள் அறிந்துள்ளனர்.



இதனால், டான்பாஸில் உள்ள ரஷ்யாவின் டி-72 பீரங்கிகள் பெரிய அளவில் முன்னேறவில்லை. முன்களத்தில் நிறுத்தப்பட்ட பீரங்கிகளும் பின்வாங்கியதாக பத்திரிகையாளர் ஜாக் மர்பி தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar04

உக்ரைனை ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்கி வரும் நிலையில்

Mar04

உக்ரைனில், ரஷ்ய ராணுவ டாங்கிகளை தடுத்து அதன் மீறி, உக்ர

Mar02

உக்ரைனியர்கள் எங்களை தாக்குகிறார்கள், பெண்கள் என்று க

Feb26

 உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு அழ

Feb24

மரணம் நெருங்கும் போது, ​​அந்த நேரத்தில் ஒருவர் மனதில்

Feb28

உக்ரைன் மீதான ரஷிய போர் இன்று 5-வது நாளாக நீடிக்கிற நில

Feb26

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ந

Feb10

கனவு காண்பது என்பது மனிதனுக்கு ஒரு சாதாரண விஷயம் தான்.

Mar15

சுமார் 30,000 துருப்புகள் மற்றும் 50 போர்க்கப்பல்களுடன் ரஷ

Feb27

உக்ரைனை ஆக்கிரமிக்க முற்படும் ரஷ்யப் படைகளின் முன்னே

Mar14

ஈராக்கில் உள்ள தூதரகம் மீது ஏவுகணைகள் ஏவப்பட்டது குறி

Mar04

உக்ரைனில் தனது ராணுவ தாக்குதல்களை நிறுத்தினால், ரஷ்யா

Jan11

டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல இலங்கையர்களி

Mar08

ரஷ்ய விமானங்கள், ஹெலிகொப்டர்கள் உக்ரைன் வீரர்களால் வீ

Mar11

பாம்புடன் சிறுமி ஒருவர் செல்லமாக கொஞ்சி விளையாடும் வீ