வடை என்றால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.
வடையில் ஏகப்பட்ட வகைகள் உண்டு.
சூடான மசால் வடையை எப்படி செய்வது குறித்து பார்க்கலாம்.
முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை பருப்பை குறைந்தது 3 மணி நேரமாவது ஊற வைக்கவும். ஊறிய பருப்பு மற்றும் பச்சை மிளகாயுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும்.
அரைக்கும் பொழுது பருப்பை முழுவதுமாக அரைத்துவிட கூடாது கொஞ்சம் கொர கொரப்பாக அரைக்க வேண்டும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதில் நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, புதினா இலை, உப்பு, மஞ்சள் தூள், கொத்தமல்லி தழை ஆகியவை சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெயை ஊற்றவும்.எண்ணெய் சூடான பிறகு மாவை தட்டி கடாயில் போட வேண்டும். பொன்னிறமாக மாறும் வேளையில் வடையை எடுத்தால் சூடான மொறு மொறு மசால் வடை ரெடி.