More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • உக்ரைன் போர்க்களத்தில் மலர்ந்த காதல்
உக்ரைன் போர்க்களத்தில் மலர்ந்த காதல்
Mar 07
உக்ரைன் போர்க்களத்தில் மலர்ந்த காதல்

ராணுவ சீருடையில் இருந்த உக்ரைன் தம்பதிகள் சக வீரர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி இன்று 12வது நாளாக தாக்குதல் நீடிக்கிறது.



உகரைனின் முக்கிய நகரங்களில் ரஷ்ய துருப்புக்கள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. அந்தவகையில் உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றி உள்ளதுடன், 2 அணுமின் நிலையங்களும் ரஷ்யா வசம் சென்றுள்ளது.



இந்நிலையில் கீவ், கார்கிவ் நகரங்களைக் கைப்பற்ற ஏவுகணை வீச்சு, வான் வெளி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.



உக்ரைனில் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்த போதிலும், தாய்நாட்டை பாதுகாக்க அந்நாட்டு மக்கள் பலர் ராணுவத்தில் ஆர்வத்துடன் சேர்ந்து வருகின்றனர். அதேசமயம் 18 முதல் 60 வயதுடைய ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற உக்ரைன் அரசு தடை விதித்துள்ளபோதும், , பல இளைஞர்கள் ராணுவத்தில் சேர வரிசையில் காத்திருக்கிறார்கள்.



இந்நிலையில் ராணுவ சீருடையில் இருந்த உக்ரைன் தம்பதிகள் சக வீரர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.



அந்த வீடியோவில், ராணுவ சீருடையில் வந்த திருமண தம்பதியான லெசியா மற்றும் வலேரி கையில் பூக்கொத்தை வைத்துத்திருந்தனர். மணமகன் வலேரி லெசியாவிற்கு ஹெல்மெட் மாட்டிவிடும் போது மணமகள் லெசியா புன்னகைத்தபடி வலேரியின் கைகளைப் பிடித்துக் கொண்டுருந்தார்.



சக வீரர்களின் குழு கோரஸாக டூயட் பாடியது, அதில் ஒருவர் வீணை போல் ஒலிக்கும் உக்ரேனிய நாட்டுப்புற இசைக்கருவியான பாண்டுராவை வாசித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



https://twitter.com/i/status/1500429751617478657






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep06

ஆப்கானிஸ்தானின் பஞ்ஷீர் பள்ளத்தாக்கில், தாலிபான்களு

Sep08

கனடாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள

Feb24

ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் 'பாரிய பொருளாத

Mar10

உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய ரஷ்ய இராணுவ வீரர்களை ப

May17

கனடாவில் தமிழர் ஒருவரை வாகனத்தில் மோதிவிட்டு தப்பிச்

Mar11

கடந்த ஆண்டு உலகம் முழுவதும் அதிகம் விற்கப்பட்ட ஸ்மார்

Mar01

இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள தொன்மை வாய்ந்த நகரம

May09

இளவயது உக்ரேனிய சிறுமி ஒருவர், ரஷ்ய துருப்புகள் கால்க

Jul10

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றுக் க

Mar23

ரஷ்யா இன்னும் உக்ரைனில் தனது இராணுவ இலக்குகள் எதையும்

May25

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பாட

Jul13

இங்கிலாந்து இந்தியாவின் நெருங்கிய வர்த்தக கூட்டாளிய

Apr25

பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்டம் கடந்த 10-ம்

Mar19

தென் கொரியா நாட்டில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக அதி

Apr19

மேற்கு உக்ரைன் நகரில் ரஷிய படைகள் நடத்திய  தாக்குதல்