More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மு.க ஸ்டாலினின் வலது கரமான அமைச்சர் சேகர்பாபுவின் மகள் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம்!
மு.க ஸ்டாலினின் வலது கரமான அமைச்சர் சேகர்பாபுவின் மகள் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம்!
Mar 08
மு.க ஸ்டாலினின் வலது கரமான அமைச்சர் சேகர்பாபுவின் மகள் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம்!

தமிழக அமைச்சர் சேகர்பாபு மகள் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் பாதுகாப்பு கோரி பெங்களூர் காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.



தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு முதல்வர் ஸ்டாலினின் வலது கரம் என்னும் அளவுக்கு அவருடன் நெருக்கமானவர் ஆவார். இந்நிலையில் சேகர்பாபுவின் மகள், காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், தனது தந்தையிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு பெங்களூரு பொலிஸ் கமிஷனரை அணுகியுள்ளார்.



அவர் ஆணையர் கமல் பந்த்திடம் பாதுகாப்பு கோரி மனு கொடுத்தார். பின்னர் பேசிய அவர், நான் ஜெயக்கல்யாணி அமைச்சர் சேகர்பாபுவின் மகள். இவர் சதீஷ் நாங்கள் இருவரும் 6 வருடங்களாக காதலித்து வருகிறோம்.



கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். நாங்கள் இருவரும் விருப்பப்பட்டு தான் திருமணம் செய்துகொண்டோம். 2021 ஆகஸ்ட் மாதம் நாங்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினோம். மூன்று நாள்களுக்கு பிறகு எங்களை புனேவில் வைத்து பிடித்தனர்.



பின்னர் அங்கிருந்து இங்கு அழைத்து வந்தனர். திருவள்ளூரில் 2 மாதம் அவரை சட்டத்துக்கு புறம்பாக பொலிஸ் உதவியுடன் அடைத்து வைத்தனர். இவருடைய பெற்றோர் மற்றும் நண்பர்களை பொலிசார் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தினர். இதற்கு எல்லாம் எங்களிடம் ஆதாரம் உள்ளது.



ஆகஸ்ட் 18-ம் திகதி நாங்கள் இருவரும் மும்பையில் இருந்தோம். அப்போது எனது தந்தை இவருக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்தார். இவர் மீது தவறான புகார் அளித்து நிறைய வழக்குகள் பதிவு செய்துள்ளனர். அதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. நாங்கள் மூன்று நாள்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டோம். தற்போது இங்கு வந்து உதவிக்கோருகிறோம். 



என்னுடைய தந்தை அமைச்சராக இருப்பதால் தமிழக அரசோ அல்லது தமிழகத்தில் உள்ளவர்களோ இந்த விவகாரத்தில் எங்களுக்கு உதவ முன்வரமாட்டார்கள். இதன்காரணமாக கர்நாடகா வந்துள்ளோம். இங்குள்ள அரசிடம் எங்களுக்கு உதவ கோரிக்கை வைக்கிறோம். எங்களுக்கு கொலை மிரட்டல் வருவதால் கர்நாடக பொலிசார் எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec30

மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில், ஒரு கோடியே ஒன்றா

Apr06

சத்தீஸ்காரில் நக்சலைட்டுகளுடனான துப்பாக்கி சண்டையில

Apr02

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் வர

Jan01

சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கை

Aug14

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வ

Oct13

இந்திய விமானப்படையில் பெண் விமானிகள் மற்றும் தரைப்பட

Mar03

உக்ரைன் நாட்டில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களை குட

Aug26

 ஒன்றிய அரசின் தேசிய பணமாக்குதல் திட்டத்தை கிண்டல் ச

Sep09

ஆந்திரா மாநிலத்தில் உள்ள கிரியா பல்கலைக்கழகத்தில் மா

Jun12