More forecasts: 30 day weather Orlando

செய்திகள்

  • All News
  • மோடியின் சொல்லுக்கு கட்டுப்பட்ட புடின்!
மோடியின் சொல்லுக்கு கட்டுப்பட்ட புடின்!
Mar 08
மோடியின் சொல்லுக்கு கட்டுப்பட்ட புடின்!

இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமது நலனை அடைவதற்கு ரஷ்யாவிற்கு இந்தியாதேவையாக இருக்கின்றது. ஆகவே இந்தியாவினுடைய சொல்லை கேட்கக்கூடிய நிலையிலே ரஷ்யா எப்போதும் இருக்கும் என அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.



எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



மோடி அவர்கள் இன்றிருக்கக்கூடிய இந்த யுத்த களமுனையில் ஒரு வல்லமை மிக்கவராக நீங்கள் பார்க்கின்றீர்களா? யுத்த தவிர்ப்பு ஒன்றை ஏற்படுத்தும் படி பிரான்சினுடைய அதிபர் அதே போன்று பல்வேறுப்பட்ட மேற்குலக தலைவர்கள் எல்லாம் கோரிக்கை விட்டபோதும் அதனை ஒரு பொருட்டாக மதிக்காத ரஷ்ய ஜனாதிபதி புடின், மோடியினுடைய கோரிக்கையை ஏற்று அந்த நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றார்.



அப்படியென்றால் உலக ஒழுங்கில் ரஷ்ய ஜனாதிபதி புடின்னை கட்டுப்படுத்தக் கூடிய அதிகாரம் மிக்கவராக மோடி இருக்கின்றாரா? என எமது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அரசியல் ஆய்வாளர் திபாகரன், 



நிச்சயமாக இந்த உலக அரசியலில் ஐ. நாவில் இந்த வீட்டோ அதிகாரம் உடைய ஐந்து நாடுகளுக்கு அடுத்தப்படியாக இருக்கின்ற ஒரு பெரிய நாடு இந்தியாதான்.



உலகினுடைய மிகப் பெரிய பொருளாதார சக்தியை கொண்ட நாடு, இரண்டாவது மிக அதிக சனத்தொகையை கொண்ட  நாடு, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற அடிப்படையில் அதாவது மோடி அவர்களுக்கு ஒரு கௌரவமும், அந்தஸ்தும் இருக்கின்றது.



அதேநேரத்தில் இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்குமான நீண்டகால பாதுகாப்பு ஒப்பந்தங்கள்,  பொருளியல் ஒப்பந்தங்கள் இருகின்றன.



அந்த அடிப்படையில் ரஷ்யாவிற்கு இந்தியா தேவையாக இருகின்றது. இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமது நலனை அடைவதற்கு ரஷ்யாவிற்கு இந்தியா தேவையாக  இருக்கின்றது. ஆகவே இந்தியாவினுடைய சொல்லை கேட்கக்கூடிய நிலையிலே ரஷ்யா எப்போதும் இருக்கும் என தெரிவித்தார்.    






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb28

உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா இ

Feb28

.

500 டன் எடை கொண்ட விண்வெளி நிலையம் இந்தியா அல்லது சீ

Mar05

அமெரிக்கா வழங்கிய பீரங்கி எதிர்ப்பு ஆயுதமான ஜாவ்லின்,

Feb16

மோட்டார் சைக்கிள் வரும் நபர்கள் தங்கச் சங்கிலியை அறுத

Mar14

ஈராக்கில் உள்ள தூதரகம் மீது ஏவுகணைகள் ஏவப்பட்டது குறி

Feb25

ரஷியா தொடுத்துள்ள போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் நட

Mar03

ஏ.டி.எம். மற்றும் கிரெடிட் கார்ட் அட்டை வழங்கும் அமெரிக

Feb25

உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதலானது ஒரு மனித சோகம் என

Mar09

அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் 5 வயது சிறுவன் அடித்ததில்,

Feb23

தங்கம் விலையானது இன்றைய வாரத்தில் ஏற்றம் இறக்கம் கண்ட

Mar08

இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமது நலனை அடைவதற்கு ரஷ

Feb25

உக்ரைன் ரஷ்யா போர் நிலைமை தீவிரமடையும் பட்சத்தில், பு

Mar08

 உக்ரைனுடன் ரஷ்யா இன்று 13வது நாளாக போரில் ஈடுபட்டுள்

Feb28

உக்ரைன் மீதான ரஷிய போர் இன்று 5-வது நாளாக நீடிக்கிற நில

Feb09

கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குள் ஜேர்மனி