More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான 11 இந்திய மீனவர்கள் விடுதலை
நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான  11 இந்திய மீனவர்கள் விடுதலை
Mar 08
நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான 11 இந்திய மீனவர்கள் விடுதலை

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த பெப்ரவரி 07 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.



ஊர்காவற்துறை நீதவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் மீனவர்கள் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.



10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒன்றரை வருட சிறைத்தண்டனை என்ற நிபந்தனையின் அடிப்படையில், மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.



இலங்கை கடற்பரப்பினுள் இழுவைமடி பயன்பாடு, கடற்றொழில் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியின்றி இலங்கை கடலில் தொழிலில் ஈடுபட்டமை மற்றும் வலைகளை தொடக்கறுத்து வைக்காமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் இந்திய மீனவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.



இந்த மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா 6 மாதங்கள் சிறைத்தண்டனை என்ற அடிப்படையில், 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



இந்திய மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட தனிப்பட்ட உடைமைகளை மீள கையளிக்குமாறு இதன்போது, ஊர்காவற்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.



மீனவர்களின் மூன்று படகுகள் தொடர்பான உரிமை கோரிக்கைக்கான விசாரணை , எதிர்வரும் மே மாதம் 27 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.



விடுதலை செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களையும் மிரிஹான இடைத்தங்கல் முகாமிற்கு அனுப்பி, குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினூடாக அவர்களை நாட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலைகள் அத்தியட்சகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.



இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மேலும் 36 இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.



இந்திய மீனவர்களின் 11 படகுகளும் பெப்ரவரி மாதம் கைப்பற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul30

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரும், சபை முதல்வருமான தினே

Sep21

மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் மன்னா

Oct04

50 கிலோ எடையுள்ள சீமெந்து மூடையின் விலையை 100 ரூபாயால் கு

Apr02

இயேசு மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்தமையை மகிழ்வுட

Oct06

பல்கலைக்கழகத்திலோ வெளியிலோ வன்முறைக்கு ஒருபோதும் இட

May03

பாடசாலைக்கு சாப்பிடாமல் பட்டினியில் செல்லும் மாணவர்

Jun12

 மன்னிப்பு கோரினார் மின்சார சபை தலைவர்

மன்னார் க

Jun07

இலங்கையின் அறிவார்ந்த தலைமுறை நாட்டை விட்டு வெளியேறி

Mar05

இலங்கைக்கு மேலும் கடன் வழங்குவதைத் தவிர்ப்பது குறித்

Sep24

கஞ்சா (Hemp) ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்குவதற்கான சட்டங்

Oct18

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 19 ஆயிரத்து 147 ற்கு மேற்பட்ட இள

Oct15

இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் க

Aug12

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் 

May01

எதிர்காலத்தில் தனியார் துறை வேலைகளில் பாரிய வீழ்ச்சி

Mar21

நாள்தோறும் இலங்கையில் ஏதாவதொரு பொருளின் விலை பாரியளவ