More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ரஷ்யாவுடன் சேர்த்து பெலாரஸை எதிர்க்கவும் தயார்: உக்ரைன் பாதுகாப்பு செய்திதொடர்பாளர் அதிரடி!
ரஷ்யாவுடன் சேர்த்து பெலாரஸை எதிர்க்கவும் தயார்: உக்ரைன் பாதுகாப்பு செய்திதொடர்பாளர் அதிரடி!
May 04
ரஷ்யாவுடன் சேர்த்து பெலாரஸை எதிர்க்கவும் தயார்: உக்ரைன் பாதுகாப்பு செய்திதொடர்பாளர் அதிரடி!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த அத்துமீறிய ராணுவ நடவடிக்கையில் பெலாரஸ் இணைந்தால், அவர்களையும் எதிர்க்க உக்ரைன் தயாராக இருப்பதாக அந்த நாட்டின் மாநில எல்லைப் பாதுகாப்பு படையின் செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.



உக்ரைன் ரஷ்யா போர் பதற்றம் உச்சகட்டத்தை தொட்டு இருக்கும் நிலையில், ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடு மற்றும் உக்ரைனின் மிக நெருங்கிய அண்டை நாடான பெலாரஸ், புதன் கிழமையான இன்று மிகப் பெரிய அளவிலான ராணுவ பயிற்சியை மேற்கொண்டுள்ளனர்.



இந்த ராணுவ பயிற்சியானது, வழக்கமான ராணுவ நடைமுறையே தவிர, அண்டை நாட்டை பயமுறுத்தும் எந்தவொரு உள் நோக்கமும் கொண்டது இல்லை என பெலாரஸ் தெரிவித்துள்ளது.



இருப்பினும், பெலாரஸின் இந்த ராணுவ பயிற்சி குறித்து பேசியுள்ள உக்ரைனின் மாநில எல்லைப் பாதுகாப்பு படையின் செய்திதொடர்பாளர் ஆண்ட்ரி டெம்சென்கோ, ரஷ்ய ராணுவம் பெலாரிஸ் நாட்டை உக்ரைனின் மீதான ராணுவ நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தாது என்ற கூற்றை நம்பவில்லை என தெரிவித்துள்ளார்.



மேலும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த ஆத்துமீறி தாக்குதலில் பெலாரஸ் இணைந்தால், அதனை எதிர்க்கவும் உக்ரைன் ஆயுதப்படை தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.ரஷ்யாவின் போர் தாக்குதல் தொடங்கிய நாள் முதலே பெலாரஸ் நாட்டுடனான எல்லையை பலப்படுத்தி விட்டதாகவும்,



இந்த போர் நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பு பெலாரஸ் நாட்டுடன் ரஷ்ய நடத்திய கூட்டு ராணுவ பயிற்சியின் மூலமே உக்ரைனில் எல்லையில் பெரும் படை ஒன்று குவிக்கபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May10

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த மே

Feb22

ருமேனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இலங்கையைச

May28

உலகை இன்றளவும் கதிகலங்க வைத்துவரும் கொரோனா வைரஸ், 2019-ம்

Feb24

இலங்கைக்கு அரிசி ஏற்றுமதி செய்வதில் உலகில் ஏனைய நாடுக

Oct04

ஜப்பானின் வடக்குப் பகுதியின் மீது வட கொரியா, பாலிஸ்டி

Apr05

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள நுசா தெங்கரா ம

Aug22

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர

Mar06

உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் ம

Apr26

கொரோனா தொற்று பாதிப்பால் மிகக் கடுமையான பாதிப்பை எதிர

Aug16

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங

Apr28

சோமாலியாவில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு பேச்சுவா

Jun10

சீனாவின் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு அமெரி

Aug14

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு இருந்த அமெரிக்க ராணுவம் க

May15

அமெரிக்காவில் சிறப்பு பல்பொருள் அங்காடியொன்றுக்குள்

Mar09

ரஷ்ய படைகளின் தாக்குதலால் உக்ரைனில் இதுவரை 61 மருத்துவ