தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் நாளை டான் படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் அளித்த பேட்டியில், பல கேள்விகளுக்கு பதில்களை கூறி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அதில். உங்களுடைய முந்த படம் ரூ. 100 கோடி வசூல் செய்ததால் தான் இப்படத்திற்கு சம்பளத்தை உயர்த்திவிட்டீர்களா என்று கேள்வி கேட்டுள்ளனர்.
அதற்கு " சம்பளத்தை நான் உயர்த்தவில்லை எனக்கு எவ்வளவு சம்பளம் தரவேண்டும் என்பதை தயாரிப்பாளர்கள் முடிவு செய்கிறார்கள் " என்று கூறியுள்ளார்.

இதன்முலம் தனது சம்பள உயர்வு சர்ச்சைக்கு நடிகர் சிவகார்த்திகேயன், முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.