More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மகிந்த சகோதரர்கள் இடையில் வெடித்தது பாரிய பிளவு
மகிந்த சகோதரர்கள் இடையில் வெடித்தது பாரிய பிளவு
May 19
மகிந்த சகோதரர்கள் இடையில் வெடித்தது பாரிய பிளவு

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்ட பின்னா் ஒவ்வொருவருக்கும் பொறுப்புக்கள் உள்ளன.



இந்தநிலையில், 1939ஆம் ஆண்டு டொனமூர் அரசியலமைப்பை போன்று குழு முறை அமைக்கப்பட்டு, அமைச்சர்கள் தெரிவுசெய்யப்பட்டால், தேசிய ஐக்கிய அரசாங்க அமைப்பின் ஊடாக செயற்படமுடியும் என்று முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச யோசனை வெளியிட்டுள்ளார்.



இது தொடர்பில், புதிய அரசியலமைப்புக்குள் திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என்று சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.



 



நாடாளுமன்றில் இன்று கருத்துரைத்த அவர், பொருளாதாரம் தொடர்பில், அதிகாரிகளுக்கும் பொறுப்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.



1994ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை பிபி ஜெயசுந்தர, நிதியமைச்சின் செயலாளராக செயற்பட்டார்.



இதன் காரணமாக 2001ஆம் ஆண்டு, மறை பொருளாதாரத்தை இலங்கை பெற்றது. 2005ம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை பிபி ஜெயசுந்தர, நிதியமைச்சின் செயலாளராக பணியாற்றினார்.



இதன் காரணமாக 2015ஆம் ஆண்டு இலங்கை, கடன் பொருளாதாரத்தை பெற்றது.



இதன்பின்னர் 2019 முதல் 2022ஆம் ஆண்டு வரை பிபி ஜெயசுந்தவினால் இலங்கைக்கு திவால் பொருளாதாரம் கிடைத்தது என்று சமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.



இதேவேளை அலரிமாளிகையில் இருந்து காலிமுகத்திடல் போராட்டம் மீது தாக்குதல் நடத்த சென்றவர்களை ஏன் பொலிஸ் தடுக்கவில்லை என்று ஏன் கேள்வி எழுப்பினார்.



இந்தநிலையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, தமது இரண்டு  தவணை ஜனாதிபதி பதவிக் காலத்தின் பின்னர் அரசியலில் இருந்து ஒய்வு பெற்றிருக்கவேண்டும்்.



இதுவே சிறந்த செயற்பாடாக இருந்திருக்கும்.  இன்றைய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.



இன்று அவர் 50 வருட அரசியல் வாழ்க்கையில் செய்த அர்ப்பணிப்புக்கள் எல்லாமே இல்லாமல் போயுள்ளன.



எனவே அரசியலில் பதவியை ஏற்றுக்கொள்கின்ற அதேநேரம் விட்டுக்கொடுக்கவும் பழகவேண்டும் என்று சம்ல் ராஜபக்ச  தெரிவித்தார்.



இதற்கிடையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க மிகவும் ராசியானவர் என்றும் சமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun01

நேற்றுமுன் தினம் இரவு காரொன்றில் இளம் குடும்பஸ்தர்கள

Mar15

நாட்டிலுள்ள இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக

Oct06

ஒரு தனி நபரின் தேவைக்காக 22 வது அரசியலமைப்புத் திருத்தம

Feb05

நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றர் மழை பெய்யலாம்

Sep22

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் நீதிம

Oct25

தீபாவளி தினத்தன்று தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்

Jan27

வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாய

Feb04

இலங்கையில் இடம்பெறும் சித்திரவதைகள் பாலியல் வன்முறை

Mar13

சந்தையில் சில சீமெந்து நிறுவனங்கள் தங்களது உற்பத்திக

Mar08

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்ம

Oct01

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் குறைத்து மக்

Jul26

நீதிபதி இளஞ்செழியின் மனிதாபிமான செயற்பாடு குறித்து த

Sep06

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறையில் காணப்படும் குறைப

Feb05

யாழ். நல்லூர் பிரதேசத்தில் அமைந்திருக்கும் பத்திக் மற

May12

இலங்கையில் தற்போது குறைந்த அளவிலான டீசல் மட்டுமே கையி