More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • இந்திய நிவாரண பொருட்கள் இன்று நாடு வந்தடைகிறது!
இந்திய நிவாரண பொருட்கள் இன்று நாடு வந்தடைகிறது!
May 22
இந்திய நிவாரண பொருட்கள் இன்று நாடு வந்தடைகிறது!

இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படும் மனிதாபிமான உதவிப் பொருட்கள் இன்றையதினம் நாட்டை வந்தடையவுள்ளன.



குறித்த உதவி பொருட்கள் இரண்டு பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிக பெறுமதி வாய்ந்தவை என தெரிவிக்கப்படுகிறது.



இதன்படி, 9,000 மெட்ரிக் தொன் அரிசி, 50 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் 25 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான மருந்து பொருட்கள் இன்று வந்தடையவுள்ளன.



நாட்டை வந்தடையவுள்ள இந்த உதவிப் பொருட்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அரசாங்கத்தின் சிரேஷ்ட தலைமைத்துவத்திடம் கையளிக்கவுள்ளார்.



தமிழக அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் 40,000 மெட்ரிக் தொன் அரிசி, 500 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்கிய உதவித் திட்டத்தின் முதற்தொகுதியாக இந்த பொருள் தொகுதி அனுப்பி வைக்கப்படுகின்றது.





தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த உதவிப்பொருட்களை சென்னை துறைமுகத்திலிருந்து கொடியசைத்து இதனை அனுப்பி வைத்தார். இந்த உதவிப்பொருட்கள் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் உள்ளடங்கிய நாடளாவிய ரீதியிலுள்ள பயனாளர்களுக்கு அரசாங்கத்தால் விநியோகிக்கப்படும்.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb05

மக்கள் மத்தியில் தான் நடிக்க வேண்டிய அவசியமோ, தேவையோ இ

Feb25

குஜராத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம

Oct03

சொகுசு கப்பல்களை வைத்திருக்கும் நிறுவனங்கள் அடிக்கட

Jul03

த.மா.கா.வில் இருந்து மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள

Aug08

குமரி மாவட்டம் அழகப்பபுரத்தில் உள்ள ஒரு கடையில் ஆமை ஓ

Jan01

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிரதமர் உதவி தொகை

Jul17

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு – கர்நாடகா இடையே

Apr26

கொரோனாவின் 2-வது அலையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வங

Aug23
Jul13

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 1½ ஆண்டுக்கு மேலாக பள்ள

Aug03

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் கடந

Jul18

மாநிலங்களவை எம்.பியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின்

Jun07

இலங்கையில் முப்பது வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற உ

Jun23

ஜார்க்கண்ட் மாநிலம் செத்மா சுகாதார துணை மையத்தில் ஒப்

Jul09

கரீபியன் தீவு நாடான ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனல் மோயிஸ