More forecasts: 30 day weather Orlando

சிறப்பு பார்வை

  • All News
  • ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்; பலரையும் ஆச்சரியப்படவைத்த கர்ப்பிணி பெண் !
ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்; பலரையும் ஆச்சரியப்படவைத்த கர்ப்பிணி பெண் !
May 24
ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்; பலரையும் ஆச்சரியப்படவைத்த கர்ப்பிணி பெண் !

இந்தியாவின் கர்நாடகாவில் கர்ப்பிணி பெண்ணொருவர் , டபுள் ட்வின்ஸ் அதாவது ஒரே பிரசவத்தில் இரு ஆண் குழந்தைகளையும் இரு பெண் குழந்தைகளுமாக நான்கு குழந்தைகளைப் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.



கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா தடசா கிராமத்தை சேர்ந்தவர் ஆரிஸ். இவருடைய மனைவி அல்மாஜ் பானு. கர்ப்பமாக இருந்த அவர், திலக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து வந்தநிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அல்மாஜ் பானுவுக்கு நேற்று அதிகாலை திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது.



இதையடுத்து அல்மாஜ் பானுவை அவரது குடும்பத்தினர் திலக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது அவருக்கு திடீரென்று ரத்தபோக்கு ஏற்பட்டது. இதனால் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர்.



இதையடுத்து, அல்மாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவரது வயிற்றுக்குள் 4 குழந்தைகள் இருந்ததை கண்டு மருத்துவர்கள் ஆச்சரியமடைந்தனர்.



இதையடுத்து டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து 4 குழந்தைகளையும் பத்திரமாக வெளியே எடுத்தனர். இந்நிலையில் தற்போது தாயும், 4 குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.



 



 



Gallery Gallery






வரவிருக்கும் நிகழ்வுகள்
May18

அண்டார்டிகாவில் அடுத்த 4 மாதங்களுக்கு சூரிய ஒளி தெரிய

Feb22

சீனாவில் உலக தமிழ் தினத்தை முன்னிட்டு மீஞ்சூப் பல்கலை

Mar08

இந்தியாவில் பெண்கள் உரிமைகளை பாதுகாக்க பல சட்டங்கள் அ

Feb11

இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்

Feb12

எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள ஜெனிவா மனித உரிமை

Jan20

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125-வது பிறந்தநாள், வருகிற 23-ந் த

Mar14

நீச்சல் குளம், விளையாட்டு அரங்கம் என வசதிகளுடன் உலகின

Feb04

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பெண்கள் கருத்தரி

May27