இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் விபத்தில் பலியான செய்து அறிந்து மனவேதனை அடைந்ததாக கிரிக்கெட் வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
லடாக்கில் 26 இந்திய ராணுவ வீரர்களுடன் சென்ற ராணுவ வாகனம், ஷியோக் ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து அறிந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, எங்கள் துணிச்சலான வீரர்களை இழந்து தவிக்கிறோம், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

இந்த நிலையில் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததற்கு இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
'நமது தைரியமிக்க வீரர்களின் உயிரிழப்பு குறித்து கேள்விப்பட்டு மனவேதனை அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.