அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கியதில் 2 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் தலைநகர் ஆஸ்டினில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானி உள்பட 2 பேர் பயணம் செய்தனர்.
குறித்த விமானம் ஆஸ்டின் நகரில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள ஷோல்ஸ் நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் நடுவானில் திணறிய விமானம் அடுத்த சில நொடிகளில் தரையில் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்து சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில், இந்த சம்பவம் குறித்து அமெரிக்காவின் தேசிய சிவில் விமான போக்குவரத்து துறை விசாரணை நடத்தி வருகிறது.