More forecasts: 30 day weather Orlando

சிறப்பு பார்வை

  • All News
  • உக்ரைனில் ரஷ்யாவின் பாரிய சித்திரவதைகள்! அம்பலப்படுத்தும் சாட்சியங்கள்
உக்ரைனில் ரஷ்யாவின் பாரிய சித்திரவதைகள்! அம்பலப்படுத்தும் சாட்சியங்கள்
Jun 01
உக்ரைனில் ரஷ்யாவின் பாரிய சித்திரவதைகள்! அம்பலப்படுத்தும் சாட்சியங்கள்

உக்ரைனியர்களை தாக்கும் ரஷ்யர்கள்



ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள உக்ரைன் உள்ள மக்கள் ரஷ்ய படையினர் சித்திரவதைகளுக்கு உட்படுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.



தாங்கள் சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறும் கெர்சனின் பொதுமக்கள் பலரின் சாட்சியங்களை பிபிசி திரட்டியுள்ளது. ஒலெக்சாண்டர் என்பவர், கெர்சன் பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமமான பிலோசெர்காவில் வசித்து வருகிறார்.



அவர் கிராமத்தின் பிரதிநிதிகளில் ஒருவராக இருந்தார்.



இராணுவத்தில் பணியாற்றிய அவர், தற்போது தனது சொந்த தொழிலை நடத்துகிறார்.



அவரும் அவரது மனைவியும் பகிரங்கமாக ரஷ்யாவுக்கு எதிரானவர்கள்,



உக்ரைனில் ரஷ்யாவின் பாரிய சித்திரவதைகள்! அம்பலப்படுத்தும் சாட்சியங்கள்



ரஷ்யாவுக்கு எதிரானவர்



அவர், ரஷ்யத் துருப்புக்கள் தங்கள் கிராமத்திற்குள் நுழைவதைத் தடுப்பதில் பெரும் பிரயத்தனத்தை மேற்கொண்டார்.



இந்தநிலையில் இறுதியில் ரஷ்யா தமது கிராமத்தை கைப்பற்றிய சிறிது நேரத்திலேயே ரஷ்ய இராணுவத்தினர் அவரைத் தேடினர்.



இதனையடுத்து அவரை பிடித்த ரஷ்ய படையினர், அவரது கழுத்தில் ஒரு கயிறு மற்றும் மணிக்கட்டில் மற்றொரு கயிற்றை கட்டினார்கள். அவரிடம் விசாரணை நடத்தியபோது கால்களை அகல விரித்து நிற்கக் கூறியுள்ளார்கள்.



தாம் பதில் சொல்லாததால் ரஸ்யர்கள், அவரின் கால்களுக்கு அடித்ததாக ஒலெக்சாண்டர் குறிப்பிட்டுள்ளார்.



அவர் விழுந்தவுடன், அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.



அவர் எழுந்திருக்க முயற்சிக்கும்போது, ​​ரஷ்யவர்கள் அவரை தாக்கினார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



உக்ரைனில் ரஷ்யாவின் பாரிய சித்திரவதைகள்! அம்பலப்படுத்தும் சாட்சியங்கள்



பலர் காணாமல் போயுள்ளனர்



பல நேரடி சாட்சியங்களின்படி, பொதுமக்கள் பலர் காணாமல் போயுள்ளனர்.



கெர்சனுக்குள், ரஷ்யா தனது பிடியை இறுக்கியுள்ளதால், மக்கள் வெளியே பேசுவதற்கு அச்சமடைந்துள்ளனர்.அங்குள்ளவர்களின் தொலைபேசிகளிலிருந்து அனைத்து புகைப்படங்களையும் காணொளிகளையும் அடிக்கடி ரஷ்ய படையினர் நீக்குகிறார்கள் என்றும் ஒலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.



தாம் சிறைப்படுத்தப்பட்டபோது உக்ரைனியர்கள் பலர், சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டமையை தாம் கண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 



உக்ரைனில் ரஷ்யாவின் பாரிய சித்திரவதைகள்! அம்பலப்படுத்தும் சாட்சியங்கள்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar29

இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்

May25

8.6 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பள்ளி பேருந்து அளவுள

Mar03

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதி

Mar12

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூகவலைத்தளங்களில் நாய

Jan19

இந்திய குடியரசு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ந் தேதிய

Mar05

உக்ரைனில் உள்ள அணுமின் நிலையத்தை எறிகணைத் தாக்குதலுக

Feb15

விளையாட்டிற்கு கூட தந்தையை அடிக்காமல் சிறுமி ஒருவர் த

Mar04

ஜப்பானில் சுமார் 1300 ஆண்டுகளாக ஹோட்டல் ஒன்று இயங்கி வரு

Jan20

கொரோனா தடுப்பூசி செலுத்திய நீரிழிவு நோயாளிகளுக்கு மு

Feb05

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்‍தை முன்னிட்டு அமெரி

May23

அவுஸ்திரேலிய வரலாற்றில் முதன் முறையாக இலங்கை தமிழ் பூ

Mar08

உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்ததன் விளைவாக நாட்டைவிட்டு

Feb11

அரச தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமா

Feb11

இலங்கை இதுவரையில் நிதி உதவி எதனையும் கோரவில்லை என சர்

May16

தமிழர் பகுதியில் மொபைல்....மோட்டார் சைக்கிள் என ஊர்சுற்