More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்த மகிந்தவின் நெருங்கிய விசுவாசி கைது
சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்த மகிந்தவின் நெருங்கிய விசுவாசி கைது
Jun 02
சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்த மகிந்தவின் நெருங்கிய விசுவாசி கைது

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மகிந்த கஹந்தகமகே குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 



அலரி மாளிகைக்கு முன்பாகவும், காலி முகத்திடல் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.



கொழும்பில் வன்முறைச் சம்பவம்



கடந்த ஒன்பதாம் திகதி கொழும்பில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களாக அவர் உள்ளிட்ட குழுவினரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.



முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட பல அரசியல்வாதிகளை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



சமூக வலைத்தளத்தில் பிரபலம்



கைது செய்யப்பட்ட மகிந்த கஹந்தகமகே கடந்த ஒன்பதாம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆடை களையப்பட்டு, உயிரிழந்தவர் போன்று காட்சிகளை இணையத்தில் வெளியிட்டிருந்தனர். பல்வேறு மீம் கிரியேற்றர்களும் இவரின் புகைப்படங்களை பல கோணங்களில் நகைச்சுவையாக்கி இருந்தன.  



முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் நெருக்கிய ஆதரவாளரும் நண்பருமான மகிந்த கஹந்தகமகே, மகிந்த பதவி விலகக் கூடாது என்ற கோஷத்துடன் வன்முறையான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb04

இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்களை  மோதவிட்டு ராஜபக்ச

Feb04

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டம் இன்று (

Jun12

எதிர்காலத்தில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை பெற்றுக

Jan26

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்

Feb02

இலங்கையில் இடம் பெற்ற யுத்த காலத்தில் சர்வதேசத்தால் த

Oct01

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் குறைத்து மக்

Jul15

நாட்டின் சொத்துக்களையும் இறைமையையும் தாரைவார்க்கும்

Feb11

அனுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியின் சாலியவெவ பகு

Feb19

லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக சலுகை விலையில் ப

Feb10

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதி

Mar25

தற்போதைய பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும

Feb06

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தா

Apr10

வவுனியா நகரில் கனகரக வாகனமும், மோட்டர் சைக்கிளும் மோத

Jul20

தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையிடம்

Jun11

இன்று (11) காலை 7 மணி முதல் 12 மணி வரையில் அனைத்து சுகாதார சே