இந்திய அரசின் உதவித்திட்டத்தின் கீழ் 2ஆம் கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு கிடைக்கப்பெறும் 450000 கிலோகிராம் அரிசி ஆணையாளர் திணைக்களம் மூலமாக யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த உதவித்திட்டமானது நாளை காலை யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் கிடைக்கப்பெறவுள்ளது.
குறித்த பொதிகள் 11 பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த 45000 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக பிரதேச செயலாளர்களிடம் கையளிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
