More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • இலங்கையிலிருந்து தமிழகம் வந்த நபரால் பரபரப்பு: தீவிர விசாரணை நடத்திய பொலிஸார்
இலங்கையிலிருந்து தமிழகம் வந்த நபரால் பரபரப்பு: தீவிர விசாரணை நடத்திய பொலிஸார்
Jun 10
இலங்கையிலிருந்து தமிழகம் வந்த நபரால் பரபரப்பு: தீவிர விசாரணை நடத்திய பொலிஸார்

ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதியில் உள்ள இரண்டாம் தீடை பகுதியில் இலங்கை திருகோணமலை பகுதியைச் சேர்ந்த தினேஷ்காந்த என்பவர் தஞ்சம் அடைந்துள்ளதாக மரைன் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.



இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற மரைன் பொலிஸார் அவரை மீட்டு விசாரணைக்காக மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.





பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப்பின் முரணான பதில் கூறி வந்ததோடு அவர் இலங்கையிலிருந்து தமிழகத்தில் அகதியாக தஞ்சமடைய வந்தாரா? அல்லது தமிழகத்தில் இருந்து இலங்கைக்குச் செல்ல தனுஷ்கோடி தீடை பகுதிக்கு சென்றாரா அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக தீடை பகுதிக்கு சென்றாரா? என பல்வேறு கோணங்களில் மரைன் பொலிஸார், கியூ பிரான்ச் பொலிஸார் ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர்.





இந்த நிலையில் தனுஷ்கோடி அடுத்த தீடை பகுதியில் கடல் பகுதியில் கடல் நீரில் நனைந்த படியே தஞ்சம் அடைந்து இருந்தால் அகதியாக வந்து இருக்கிறார் என்று பொலிஸார் அழைத்து சென்று மண்டபம் அகதிகள் முகாமில் அடைத்து விடுவார்கள் என்ற நோக்கத்தோடு தீடை பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளார்.





இதையடுத்து மரைன், கியூ பிரான்ச் பொலிஸாரின், மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணையில் அவர் விசா மூலம் இலங்கை கொழும்பில் இருந்து சென்னை வந்து பின்னர் அங்கிருந்து மதுரை வந்தடைந்து இன்று (09-06-2022) காலை ராமேஸ்வரம் வந்துள்ளார்.



தற்போது அவரை முழு விசாரணை நடத்தியதில் விசா மூலம் வந்தது உறுதியானதை அடுத்து அவருடைய விசாவின் கால அவகாசம் இன்னும் 90 நாட்கள் உள்ளது.



இந்த நிலையில் மத்திய புலனாய்வுத் துறையினர் இலங்கையில் இருந்து விசா மூலம் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் இலங்கை திருகோணம் பகுதியில் கடந்த 2012 ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை இலங்கை காவல் துறையில் பணியாற்றி வந்தது தெரியவந்தது.





இதையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு அவர் தனது பணியை விருப்ப ஓய்வு கேட்டு வெளியேறியுள்ளார்.



இந்த நிலையில் விசா மூலம் தமிழகம் வந்த இலங்கையை சேர்ந்த தினேஷ் காந்த் என்பவர் தமிழகப் பகுதிகளில் உளவு பார்க்க வந்தாரா என்ற கோணத்தில் மத்திய புலனாய்வு துறையினர் 5 மணி நேரம் தீவிரமாக விசாரணை நடத்தினர்.



பின்னர் அவர் முறையான ஆவணங்கள் வைத்துள்ளதை அடுத்து சந்தேகப்படும் படியாக வெளியிடங்களில் சுற்றக் கூடாது என்று அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan14

சென்னை மாவட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டை பெரியபாளையத்த

Jun16

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாம்கள் எழுச்

Aug12

கேரளாவில் கொரோனா பெருந்தொற்று இன்னும் கட்டுப்பாட்டு

May04

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்

Mar08

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பஞ்சாயத்து யூனியனுக்

Jun08

புனே மாவட்டம் முல்சி தாலுகா பிரன்கட் எம்.ஐ.டி.சி. தொழிற

Apr19

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சுழல்பந்த

Mar30

கோவை சுகுணாபுரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில

May31

அரியானாவில் கடந்த 2 வாரங்களாக கறுப்பு பூஞ்சை தொற்று அத

Jan27

கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட

Sep18

தமிழகத்தில் கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்

Feb22

இந்தியாவில் ஓட்டு போட தனது சொந்த ஊருக்கு வந்த மாணவி தற

Oct03

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றும

Sep14

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை உத்தர பிரதேச மாநிலம்

Sep18

பான் எண்ணை (நிரந்தர கணக்கு எண்) ஆதார் எண்ணுடன் இணைப்பதற