எதிர்காலத்தில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள நேரிடலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் கடும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.

ரஷ்ய அரசாங்கம் இலங்கைக்கு கோதுமையை வழங்கியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்திய அரசாங்கம் இலங்கைக்கு எரிபொருள் உட்பட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது.
இந்திய அரசாங்கத்தின் வழங்கப்படவுள்ளதாக உறுதியளித்த கடன் தொகையின் எல்லை நிறைவுக்கு வரவுள்ளது. இந்த கடன் திட்டத்திற்கு அமைய எரிபொருளை ஏற்றிய இறுதி கப்பல் எதிர்வரும் 28ஆம் திகதி இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.